Asianet News TamilAsianet News Tamil

ioc share: வரலாறு படைத்த இந்தியன் ஆயில் நிறுவனம்: கடந்த நிதியாண்டில் உச்சபட்ச வருவாய், நிகர லாபம்

ioc share: இந்தியன் ஆயில் நிறுவனம்(IOC) 2022 மார்ச் மாதத்துடன் முடிந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிகர லாபம் 31.4 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த நிதியாண்டில் அதிகபட்ச வருவாய், நிகரலாபத்தில் எந்த இந்திய நிறுவனமும் படைக்காத சாதனையை ஐஓசி படைத்துள்ளது.

ioc share : IOC Q4 net profit drops 31%; board recommends 1:2 bonus issue of shares
Author
Mumbai, First Published May 18, 2022, 11:14 AM IST

இந்தியன் ஆயில் நிறுவனம்(IOC) 2022 மார்ச் மாதத்துடன் முடிந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிகர லாபம் 31.4 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த நிதியாண்டில் அதிகபட்ச வருவாய், நிகரலாபத்தில் எந்த இந்திய நிறுவனமும் படைக்காத சாதனையை ஐஓசி படைத்துள்ளது.

ioc share : IOC Q4 net profit drops 31%; board recommends 1:2 bonus issue of shares

கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டான 2022 ஜனவரி-மார்ச் மாதங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ6,021 கோடியாகும்(ஒரு பங்கிற்கு ரூ.6.56 பைசா) இது கடந்த ஆண்டு இதே கடைசிகாலாண்டில் ரூ.8,781 கோடியாக இருந்தது. அதாவது ஒரு பங்கிற்கு ரூ.9.56 வழங்கப்பட்டது. பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் வாகன எரிபொருள் விற்பனையில் ஏற்பட்ட இழப்புதான் நிகர லாபம் குறைய காரணமாகும்.

ஆனால் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் 3-வது காலாண்டைவிட அதிகரித்து ரூ.5,860 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியன் ஆயிலின் வருவாய் ரூ.1.63 லட்சம் கோடியாக இருந்தநிலையில் கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.2.06 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

ioc share : IOC Q4 net profit drops 31%; board recommends 1:2 bonus issue of shares

2021 ஏப்ரல் முதல் 2022-மார்ச் வரையிலான நிதியாண்டில் இந்தியன் ஆயிலின் வருவாய் ரூ.7.28 லட்சம் கோடியாகும். இதுவரை எந்த கார்ப்பரேட் நிறுவனமும் ஈட்டாத வருவாயாகும். 

ஒட்டுமொத்தமாக 2021-22 நிதியாண்டில் இந்தியன் ஆயிலின் நிகர லாபம், ரூ.30 ஆயிரத்து 443 கோடியாகும். இது கடந்த 2020-21 நிதியாண்டை விட 30 சதவீதம் அதிகமாகும். 2020-21 நிதியாண்டில் ரூ.21,836 கோடியாகத்தான் இருந்தது. இந்தியன் ஆயில் நிறுவனம் இதுவரை பெறாத லாபம் கடந்த நிதியாண்டில் கிடைத்தது. 

5 மாநிலத் தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை 4 மாதங்கள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தாமல் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்தான் உயர்த்தத் தொடங்கின. இதனால்தான் இந்தியன் ஆயில்நிறுவனத்தின் வருவாயிலும், லாபத்திலும் குறைவு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியபோதிலும்கூட எண்ணெய் நிறுவனங்களுக்கான உற்பத்திச் செலவை ஈடுகட் முடியாமல் தொடர்ந்து இழப்பில்தான் உள்ளன. இதற்கு காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலருக்கும் அதிகமாக இருப்பதாகும்.

ioc share : IOC Q4 net profit drops 31%; board recommends 1:2 bonus issue of shares

அதுமட்டுமல்லாமல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்தபோதிலும்கூட, எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியவில்லை. 

இதையடுத்து, ஐஓசி நிறுவனத்தின் நிர்வாக குழு வாரியம், பங்குகளை போனஸாக 1:2 என்ற அளவில் ஒரு பங்கு 10 ரூபாயில் வழங்க பரிந்துரை செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios