investment in gold: தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது. தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும், எந்த நாட்டுக்கும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும். டாலருக்கு அடுத்தார்போல் அனைத்து நாடுகளிலும் ஏற்கக்கூடியது தங்கம் மட்டும்தான்.

தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது. தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும், எந்த நாட்டுக்கும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும். டாலருக்கு அடுத்தார்போல் அனைத்து நாடுகளிலும் ஏற்கக்கூடியது தங்கம் மட்டும்தான்.

தங்கத்தைப் பொறுத்தவரை பங்குச்சந்தையும் தங்கமும் நேர்எதிரானது. பங்குச்சந்தையின் மதிப்பு உயரும்போது, தங்கத்தின் மதிப்பு சரியும், தங்கத்தின் விலை உயரும் போது பங்குச்சந்தையில் பெரும் சரிவு இருக்கும். இதில் இழப்பு இல்லாத பொருள் தங்கம் மட்டும்தான்.

இந்த தங்கத்தை வெறும் நகைகளாக, பார்களாக வாங்கி முதலீடு செய்யாமல் வேறு பலவழிகளிலும் முதலீடு செய்யும்போது, பணமும் பாதுகாப்பாக இருக்கும், முதலீட்டுக்கு வருமானமும் கிடைக்கும். 

தங்கமாக வாங்குதல்(GOLD bar coin )

தங்கத்தை பொருளாக முதலீடு செய்தல். அதாவது தங்க நகைகள், காசுகள், தங்கக்கட்டிகளாக வாங்கி பாதுகாப்பாக வீட்டிலோ அல்லது வங்கி லாக்கரிலோ வைத்திருத்தல்ஒரு வகையான முதலீடாகும். இவ்வாறு தங்கமாக வீட்டில் இருக்கும்போது தேவைக்கு ஏற்ப அடமானம் வைத்து ரொக்கப்பணமாக மாற்ற முடியும்

கோல்டு இடிஎப்(GOLD ETF)

தங்கத்தை கோல்டு இடிஎப்பில் முதலீடு செய்யலாம் அதாவது டீமேட் கணக்கு வடிவத்தில் அல்லது காகித வடிவத்தில் தங்கத்தை முதலீடு செய்யலாம். கோல் இடிஎப் முறையில் டீமேட் கணக்கு தொடங்கி, ஒரு கிராம் முதல் எத்தனை கிலோ வேண்டுமானாலும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வர்த்தகம் செய்யலாம். இந்த முறையில் தங்கத்தை சேமித்து வைப்பது குறித்தும், திருட்டு பயம் குறித்தும் முதலீட்டாளர் கவலைப்படத் தேவையில்லை. தங்கம் என்பது டீமேட் வடிவத்தில் இருக்கும். 

தங்கப் பத்திரத் திட்டம்(Sovereign Gold Bonds )

மத்திய அரசால் ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்படுவது தங்கப்பத்திரம் திட்டமாகும். இதில் ஒரு கிராம் சுத்த தங்கம் மதிப்பிலிருந்து ஒருவர் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கு குறைந்தபட்ச வட்டி வழங்கப்படும். இந்த முதலீட்டுக் காலம் முடிந்தபின் அப்போது தங்கத்தின் மதிப்பு என்னவோ அதன்அடிப்படையில் பணம் வழங்கப்படும். 

டிஜிட்டல் கோல்டு(Digital gold)

டிஜிட்டல் கோல்டு முதலீடு என்பது தங்கத்தை நேரடியாக வாங்காமல், ஆன்லைனில் முதலீடு செய்வதாகும். ஆன்லைனில் அல்லது யுபிஐ மூலம் டிஜிட்டல் கோல்டை வாங்கலாம். விற்பவர் தங்கத்தை விற்றதற்கான சான்றிதழை வழங்குவார். இதை வாங்குவோர் பாதுகாப்பாக வாலட்டில் வைத்திருக்கலாம். டிஜி்ட்டல் கோல்டு திட்டத்தில் ஒரு கிராம் முதல் முதலீடு செய்யலாம். டிஜி்ட்டல் வடிவில் இருப்பதால் எந்த நேரத்திலும் உடனுக்குடன் விற்று ரொக்கப்பணமாக மாற்றலாம். தங்கம் வாங்குவதற்கு நகைக்கடைக்கு அலையத் தேவையில்லை. இந்த முறையில் ஒருவர் ரூ. 2லட்சம் வரை டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.