48 மணி நேரத்தில் 1,250 கோடி மதிப்பில் தங்கம் விற்பனை....! நகைக்கடைகளில்  தீவிர  விசாரணை..!

பழைய  500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என  கடந்த  நவம்பர் 8 அம் தேதி மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து  , ரூபாய் நோட்டு செல்லாது என்ற விவகாரத்தால், அதிக கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் , ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த  அதே  நாளின் இரவில்  மட்டும்   2  டன்  நகை  விற்பனை செய்துள்ளனர்.

வேறு வழியில்லாமல்,  கருப்பு பணத்தை எவ்வாறு மாற்றுவது என யோசித்த  பல பண முதலைகள்,  தங்கத்தில்  முதலீடு  செய்ய   திட்டமிட்டு ஒரே  இரவில்   கிலோ கணக்கில் தங்கம் வாங்கியுள்ளனர்.

அதன்படி ,  ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த , அடுத்த  48 மணி நேரத்தில் மட்டும் , 4 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை, தற்போது,  புலனாய்வு  அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அதன்படி  4 டன் தங்கத்தின்  மதிப்பு 1,250  கோடி என்பது  குறிப்பிடத்தக்கது.

இதனை  தொடர்ந்து தற்போது, சென்னை  மற்றும்  நாட்டின் பல்வேறு  சந்தேகத்திற்கு இடமான நகைக்கடைகளில், அதாவது 600 கும்  மேற்பட்ட  நகைக்கடைகளில்  சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த  சோதனையின் போது, நகை வியாபாரம்  குறித்து ஒப்புக்கொண்ட  நகைக்கடைகள் , வரி  ஏய்ப்பு செய்துள்ளது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரை ,  நகை  வியாபாரத்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட வரி  ஏய்ப்பு 2௦  கோடி என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும், முழு சோதனை முடியும் தருவாயில், தங்கம் விற்றதன் மூலம்  நடைப்பெற்ற  வரி ஏய்ப்பு 100  கோடியை தாண்டும் என  எதிரபார்க்கப்படுகிறது.