வரும் 28 ஆம் தேதி அக்ஷய திருதி என்பதால், அதனை முன்னிட்டு, நடப்பு  நிதி ஆண்டின் முதல் தங்க பத்திர திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பம் வழங்க உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது .

அதன் படி, தங்க பத்திரத்தின் விலை சந்தையில் கிடைப்பதை விட 5௦ ரூபாய் குறைவாக தான்  மக்களுக்குவழங்க திட்டமிட்டுள்ளது அமைச்சகம்.

தங்கத்தின் விலையை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களாகவே, பொதுவாகவே பெரிய அளவில் ஏற்ற இறக்கம் காணப்படவில்லை. அதனை தொடர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை சராசரியாக 2,951  ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த தொகையிலிருந்து  5௦ ரூபாய் குறைத்து ஒரு கிராம் தங்கம் 2,9௦1 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தங்கபத்திர  திட்டத்தில் இணைவதற்கு  இன்று  முதல் வரும் 28 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் :

ஆண்டுக்கு 2.75 சதவீதம் வட்டி

முதலீட்டு காலம் 8 ஆண்டுகள்

குறிப்பு : 5 ஆண்டுகள் முடிந்த  பின்னர் நாம் முதலீடு செய்த தொகையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பல முக்கிய சிறப்பு திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்துள்ளது. அதில் குறிப்பாக மக்களிடம், முதலீடு செய்வதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வகையில் இந்த தங்க முதலீடு  பத்திரத்தை  மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது .