தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே இவரை திரும்பிப் பார்த்தது, இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. மீடியா தொழில் என்றால் என்ன? இது இந்தியாவில் லாபகரமாக எப்படி செய்வது? என்ற வெற்றிக் கொடி நாட்டியவர் தான் தமிழகத்தின் கலாநிதிமாறன் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த முரசொலி மாறன் மல்லிகா மாறனின் மூத்த மகன் தான் கலாநிதி மாறன்.

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதியின் பேரனாக இருந்தாலும் கூட தனக்கென தனி பாதையை வகுத்து தாத்தா மற்றும் அப்பாவின் பேர் உதவியோடு மிகப்பெரிய அந்தஸ்தை அடைந்தவர் ஆவார். இந்தியாவின் தற்போதைய நிலையில் அதிக ஊதியம் பெறும் தலைமை செயல் அதிகாரி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தான் இந்த கலாநிதிமாறன். சுமார் 170 கோடி ரூபாய் வருடத்திற்கு இவருக்கு சம்பளம் மட்டுமே கிடைக்கிறதாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவருடைய தொழில் சாம்ராஜ்யத்தின் அளவை சன் டிவி, ஜெமினி டிவி, உதயா டிவி, சூர்யா டிவி, கே.டிவி, சன் லைப், சன் மியூசிக், சன் மூவி, ஆதித்யா டிவி இதே போன்று அனைத்து மொழிகளிலும் புதிய புதிய சேனல்கள் சன் டைரக்ட் நேரடி ஒளிபரப்பு சேவை, விமான சேவை, தினகரன் நாளேடு, குங்குமம் வார பத்திரிக்கை, சுமங்கலி கேபிள் விஷன் என கலாநிதி மாறனின் தொழில் சாம்ராஜ்யத்தை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

சமீபத்தில் செர்ரி fibernet என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். இத்தனை இத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான கலாநிதிமாறன், ஆரம்பத்தில் என்னென்ன தொழில்கள் செய்தார் தெரியுமா? தற்போது எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்காமல் பெருமைப்பட்டுக்கொள்ளும், பலருக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கூட அளிக்கலாம் இத்தனை செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து விட்டு கலாநிதி மாறன் லயோலா கல்லூரியில் படித்த முடித்தவுடன், அவரது தந்தையும், அவரது தாத்தாவும் அவருக்கு கொடுத்த பணி என்ன தெரியுமா? முரசொலி பத்திரிக்கையில் பிழைத் திருத்தம் செய்யும் "ப்ரூஃப் ரீடர்" வேலை தானாம். அதை மாத சம்பளத்திற்கு செய்து வந்திருக்கிறார் கலாநிதிமாறன். 

அதே நேரத்தில் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நெருங்கிய நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஊட்டியில் இருந்து டி பாக்கெட்டுகளை வாங்கி அதை சைக்கிள்கள் வைத்து திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி தினமும் ஆயிரக்கணக்கான பொட்டலங்களை சப்ளை செய்து இருக்கிறார். 

அந்த கணக்கு வழக்குகளையும் சரியாக பார்த்து, அதில் லாபமும் ஈட்டி இருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சக்கரவர்த்திகளில் ஒருவரான கலாநிதிமாறனின் முதல் தொழில் 'டி' பாக்கெட்டுகள் விற்றது என்றால் நம்ப முடியுமா? ஆனால் உண்மை இதுதான் இத்தனை தடைகளை கடந்து தான் அவர் இன்று இந்த நிலையை அடைந்து இருக்கிறார் என்பது தற்போதைய இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும், தொழில்முனைவோருக்கும் சிறந்த பாடமே.