inflation : WPI : நாட்டின் மே மாதத்துக்கான மொத்தவிலைப் பணவீக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் 15.88 சதவீதமாக அதிகரித்துள்ளது . கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின் இதுதான் அதிகபட்சமாகும்.

நாட்டின் மே மாதத்துக்கான மொத்தவிலைப் பணவீக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் 15.88 சதவீதமாக அதிகரித்துள்ளது . கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின் இதுதான் அதிகபட்சமாகும்.

மே மாதத்தில் மொத்தவிலைப் பணவீக்கம் 15.10% இருக்கும் என்று ராய்டர்ஸ் பொருளாதார வல்லுநர்கள் குழு கணித்திருந்தனர். ஆனால், அதைவிட மே மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் 13.11 சதவீதமாக மொத்தவிலைப் பணவீக்கம் இருந்தது.

மே மாதத்துக்கான சில்லரைப் பணவீக்கம் அல்லது நுகர்வோர் பணவீக்கம் நேற்று வெளியானது. அதில் மே மாதத்தில் சில்லரை விலைப் பணவீக்கம் 7.04 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதம் இருந்த நிலையில் மே மாதத்தில் 7.04 சதவீதமாகக் குறைந்துள்ளது ஆறுதல்தான். இருப்பினும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவு என்பது 6சதவீத்துக்குள் கட்டுப்படுத்துவதுதான். இன்னும் சில்லரைப் பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய அ ரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்ததால், ஓரளவுக்கு பணவீக்கம் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியும் கடந்த மாதத்தில் 40 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது. இரு நடவடிக்கையும் சேர்ந்து பணவீக்கத்தை சற்று குறைத்துள்ளது. அடுத்துவரும் மாதங்களில் பணவீக்கம் படிப்படியாகக் குறையும்

ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 8.88 சதவீதமாக அதிகரித்தது, மே மாதத்தில் 10.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகளுக்கான பணவீக்கம் ஏப்ரலில் 23.24 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 56.36 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உற்பத்திப் பொருட்களுக்கான பணவீக்கம் ஏப்ரலில் 10.85 சதவீதமாக இருந்த நிலையில் மே மாதத்தில் 10.11 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல், மின்சாரத்தின் விலை 40.62சதவீதமாக மே மாதத்தில் உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்தில் ஏற்கெனவே கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்திய நிலையில் கடந்த வாரத்தில் மேலும் 50 புள்ளிகளை உயர்த்தியுள்ளது. இதுவரை வட்டிவீதத்தில் 90 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதன் விளைவு அடுத்தடுத்த மாதங்களில் எதிரொலித்து பணவீக்கம் குறையத் தொடங்கும்.