Asianet News TamilAsianet News Tamil

indonesia ban palm oil export :பாக்கெட் பத்திரம்! பாமாயில் விலை உயரப் போகுது; ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை

indonesia ban palm oil export :இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு வரும் 28ம் தேதி முதல் தடை கொண்டுவரப்படுவதால், வரும் நாட்களில் பாமாயில் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.

indonesia ban palm oil export :  Indonesia bans on palm oil exports
Author
New Delhi, First Published Apr 23, 2022, 1:33 PM IST

இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு வரும் 28ம் தேதி முதல் தடை கொண்டுவரப்படுவதால், வரும் நாட்களில் பாமாயில் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.

மிகப்பெரிய உற்பத்தியாளர்

உலகிலேயே பாமாயில் தயாரிப்பில் மிகப்பெரிய நாடான இந்தோனேசியா, இந்தியாவின் பாமாயில் தேவையில் 45 சதவீதத்தை நிறைவு செய்கிறது. ஆனால், பாமாயில் ஏற்றுமதிக்கு திடீரென விதிக்கப்பட்ட தடையால், இந்தியாவில் பாமாயில்விலை உயரக்கூடும், அதனால் நடுத்தரக் குடும்பங்கள், சிறிய ஹோட்டல்கள், தள்ளுவண்டி உணவுக்கடைகள், நடுத்தர ஹோட்டல்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

indonesia ban palm oil export :  Indonesia bans on palm oil exports

இறக்குமதி

 இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 1.30 கோடி டன் மூதல் 1.35 கோடி டன் சமையல் எண்ணெயைஇறக்குமதி செய்கிறது. இதில் 63 சதவீதம அதாவது 85லட்சம் டன் பாமாயிலாகும். இந்த 85 லட்சம் டன் பாமாயில் இறக்குமதியில் 45 சதவீதம் இந்தோனேசியா, மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறது.

ஆனால், இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி குறைந்து, மே மாதம் முதல் 3 லட்சம் முதல் 3.25 லட்சம் டன்னாக குறைந்தால், பாமாயில் விலை கடுமையாக அதிகரிக்கும். ஏற்கெனவே ரஷ்யா உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய்விலை உயர்ந்துள்ளநிலையில் பாமாயில் விலையும் உயரும்.

indonesia ban palm oil export :  Indonesia bans on palm oil exports

விலைவாசி உயரும்

இந்திய சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு அமைப்பின் இயக்குநர் பி.வி.மேத்தா கூறுகையில் “ ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, சூரிய காந்தி எண்ணெய் சப்ளை 2.50 லட்சம் டன்னிலிருந்து ஒரு லட்சம் டன்னாகக் குறைந்துவிட்டது. இதனால் சூரியகாந்தி எண்ணெய்விலை உயர்ந்துவிட்டது, இப்போது பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசியா நிறுத்தினால், நிச்சயம் நமக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

ஆதலால் இந்திய அரசு உடனடியாக இந்தோனேசியா அரசிடம் பேச வேண்டும். மும்பைக்கு வந்துள்ள பாமாயில் விலை கடந்த ஓர் ஆண்டு இருந்த விலையைவிட 51 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இந்தோனேசியாவின் தடை இந்தியாவை மட்டும் பாதிக்காமல், இந்தோனேசியாவை சார்ந்திருக்கும் உலக நாடுகளையும் பாதிக்கும்” எனத் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios