gold imports:கொரோனா காலத்திலும்கூட இந்தியர்களுக்கு தங்கத்தின் மோகம் குறையவில்லை. கடந்த 2021ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து 1,067.72 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக நகை மற்றும் கற்கள் ஏற்றுமதி கவுன்சில்(GJEPC) தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்திலும்கூட இந்தியர்களுக்கு தங்கத்தின் மோகம் குறையவில்லை. கடந்த 2021ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து 1,067.72 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக நகை மற்றும் கற்கள் ஏற்றுமதி கவுன்சில்(GJEPC) தெரிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 430.11 டன்னாக இருந்த நிலையில் அடுத்த ஆண்டே ஒரு மடங்கு அதிகரித்து 1,067 டன்னாக உயர்ந்துள்ளது.

இறக்குமதி

கடந்த 2019ம் ஆண்டில் 836.38 டன் தங்கம்தான் இந்தியா இறக்குமதி செய்தது, ஆனால், 2021ம் ஆண்டில் அதைவிட 27.66% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான தங்கம் ஸ்விட்சர்லாந்து(469.66டன்), அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம்(120.16டன்), தென் ஆப்பிரிக்கா(71.68டன்), கினியா(58.72டன்) ஆகியநாடுகளில்இருந்துகடந்த 2021ம் ஆண்டு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

முன்னணி நாடு

சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாதான் உலகிலேயே அதிகமான அளவு தங்கம் இறக்குமதி செய்யும் நாடு, தங்கத்தை ஆசையுடன் நுகரும் நாடாகவும் இருக்கிறது.

கொரோனா காலம்

நகை மற்றும் கற்கள் ஏற்றுமதி கவுன்சில்(GJEPC) தலைவர் கோலின் ஷா கூறுகையில் “ 2021ம் ஆண்டில் இந்தியா 1,067 டன் தங்கம் இறக்குமதி செய்துள்ளது. கொரோனா காலம் முழுமையாக முடியாத காலத்திலும்கூட த ங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது. ஆனால், கொரோனா முதல் அலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 430.11 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.

7 ஆண்டுகளில்

ஆயிரம் டன்னுக்கு அதிகமாக இதற்கு முன் 2015ம் ஆண்டு 1,047 டன் தங்கமும், 2017ம் ஆண்டு 1032டன் தங்கமும்இறக்குமதி செய்யப்பட்டது. அதோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு தங்கம் இறக்குமதி அதிகம். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த ஆண்டு தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு 2021-2022 ஏப்ரல் முதல் பிப்ரவரி காலத்தில் மாதத்துக்கு 76.57டன் தங்கம்இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018, 2019ம் ஆண்டு இதேஅளவு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டாலும் அதைவிட கடந்த ஆண்டு சற்று அதிகம். 

ஏற்றுமதி

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 842.28 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தை நகைகளாக ஏற்றமதி செய்தவகையில் இந்தியா கடந்த ஆண்டு 50 % அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. அதாவது 880.70 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஏற்றுமதி அளவும் அதிகரித்துள்ளது, உள்நாட்டிலும் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்