Asianet News TamilAsianet News Tamil

indiapost: neft rtgs: அஞ்சலங்களில் இனிமேல் இந்த வசதியும் கிடைக்கும்? விரிவான கட்டணம் விவரம்

indiapost : neft rtgs :அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனிமேல் பிற வங்கிகளுக்கு பணம் அனுப்ப விரைவில் நெப்ட்(NEFT) ஆர்டிஜிஎஸ்(RTGS) வசதியைப் பெற உள்ளனர்.

indiapost : neft rtgs :   Post Office savings account holders to get THIS new facility soon
Author
New Delhi, First Published May 25, 2022, 11:55 AM IST

அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனிமேல் பிற வங்கிகளுக்கு பணம் அனுப்ப விரைவில் நெப்ட்(NEFT) ஆர்டிஜிஎஸ்(RTGS) வசதியைப் பெற உள்ளனர்.

அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வேறு வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் இணையதளம் மூலம்தான் அனுப்பப்பட்டு வந்தது.  இனிமேல் அதிகமான தொகையை நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பலாம். 
ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் வசதிகள் வரும் 31ம் தேதி முதல் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்குக் கிடைக்கும். 

indiapost : neft rtgs :   Post Office savings account holders to get THIS new facility soon

இது குறித்து மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது “ அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 31-05-2022 முதல் என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் மூலம் பிற வங்கிகளுக்கு பணம் அனுப்பும் வசதி கிடைக்கும். இதற்கு எந்தமாதிரியான வழிகாட்டல்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகங்களி்ல் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை, தகவல் பலகையை அஞ்சலகங்களில் வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்டி மூலம் பணம் அனுப்ப கட்டண விவரம்
1.    ரூ.10ஆயிரம் வரை அனுப்புவதற்கு ரூ.2.50+ஜிஎஸ்டி வரி
2.    ரூ.10 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை: ரூ.5+ ஜிஎஸ்டி வரி
3.    ரூ.ஒருலட்சம் முதல் ரூ.2. லட்சம் வரை: ரூ.15 +ஜிஎஸ்டி
4.    ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பரிமாற்றம்: ரூ.25 + ஜிஎஸ்டி வரி

indiapost : neft rtgs :   Post Office savings account holders to get THIS new facility soon

நெப்ட் முறை என்பது வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்ற முறையாகும். இது 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும், ஆண்டு முழுவதும் இயங்கக்கூடியது. இந்த முறை மூலம் பணம் அனுப்பினால் அடுத்த 30 நிமிடங்களில் பெறுவோருக்குக் கிடைத்துவிடும்

ஆர்டிஜிஎஸ் முறையிலும் பணத்தை தடையின்றி ஆண்டுமுழுவதும் ஒருவருக்கு அனுப்ப முடியும். வங்கிகளில் மட்டுமே இருந்த இந்த வசதி இதுவரை அஞ்சலகங்களுக்கு இல்லை. வரும் 31ம் தேதி முதல் அஞ்சலகங்களிலும் இந்த வசதி கிடைக்க இருக்கிறது

Follow Us:
Download App:
  • android
  • ios