Petrol diesel price: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்திருக்கும் போரால் பெட்ரோல், சமையல் எண்ணெய் விலை உயரும் என அஞ்சி மக்கள் அதை இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்திருக்கும் போரால் பெட்ரோல், சமையல் எண்ணெய் விலை உயரும் என அஞ்சி மக்கள் அதை இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்கா ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் சர்வதேச சந்தைியல் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் தொடர்ந்துவிலை உயர்ந்து வருகிறது. கடந்த 14 ஆண்டுகளுக்குப்பின் கச்சா எண்ணெய்விலை நேற்று பேரல் 140 டாலருக்கு உயர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவிலும் எதிரொலிக்கும். 5 மாநிலத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது. வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 வரை உயரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உக்ரைன், ரஷ்யாவிலிருந்து சூர்யகாந்தி எண்ணெய் இறக்குமதியும் பாதிக்கும் என்பதால், அதன் விலையும் உயரக்கூடும் என்ற செய்தி வெளியானது.
இதனால், மக்கள் சூர்யகாந்தி எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசலை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளதாக ராய்டர்ஸ் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ரேஹா கான் கூறுகையில் “ உக்ரைன் ரஷ்யப் போரால் சமையல் எண்ணெய் விலைஉயரும் என்று செய்தியில் பார்த்தேன்.அதனால்தான் 10 லிட்டர் கொண்ட டின் வாங்கிவிட்டேன். வழக்கமாக மாதத்துக்கு 5 லிட்டர்தான் வாங்குவேன் தற்போது இரு மடங்குவாங்கிவிட்டேன்” எனத் தெரிவித்தார்

கடந்த ஒரு மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 20% அதிகரித்துவிட்டது, போலியான செய்திகள் ஆகியவற்றைப் படித்துவிட்டு, மக்கள் பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெயை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா சூர்யகாந்தி எண்ணெயில் 90 சதவீதத்தை ரஷ்யா, உக்ரைனிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. ஆனால், சமையல் எண்ணெயில் வெறும் 14 சதவீதம்தான் சூர்யகாந்தி எண்ணெய் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் அமைப்பின் மும்பை தலைவர் பி.வி.மேத்தா கூறுகையில் “ பாமாயில், சோயா எண்ணெய், கடுகுஎண்ணெய், கடலைஎண்ணெய் ஆகியைஇந்தியர்களுக்கு தேவையான அளவு இருப்பு இருக்கிறது. ஆதலால், மக்கள் பதற்றப்படவோ அச்சப்படவோ தேவையில்லை” எனத் தெரிவித்தார்

பெட்ரோல், டீசலைப் பொறுத்தவரை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதியிலிருந்து விலையை உயர்த்தவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வரும் நாட்களில் விலை உயரலாம் எனத் தெரிகிறது
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஸ்வப்னில் பத்தாரே கூறுகையில் “ டீசல் விலை லிட்டருக்கு ரூ.20 உயரப்போகிறது என்பதைப் படித்துஅதிர்ச்சி அடைந்தேன். விரைவில் அறுவடை இருக்கிறது. அந்த நேரத்தில் ஏராளமான டீசல் தேவைப்படும். ஆதலால், என்னிடம் இருந்த பணத்தில்இப்போதே டீசலைவாங்கி வைத்துக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்
