இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரிப்பு மற்றும் பலவீனமான உலகளாவிய சந்தை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச் சந்தை இன்று சரிவைக் கண்டது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தாலும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்றுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் துவங்கியபோது, இந்திய பங்குச் சந்தை சரிவைக் கண்டது. பிஎஸ்இ சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 50 குறியீடு 24,090.45 புள்ளிகளுக்கு சரிந்து, உறுதியாக இருக்கிறது.
Indian Share Market today:
நிஃப்டி 50 குறியீடு இன்று 23,935 இல் தொடங்கியது. சிறிது நேரத்தில் 24,000 புள்ளிகளை தொட்டது. இருப்பினும், அதன் முக்கியமான 200-DEMA (200 நாட்கள் கணிப்பு) ஆதரவை விட 24,050 இல் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது. இது பாசிடிவ்வாக பார்க்கப்படுகிறது. பிஎஸ்இ சென்செக்ஸ் 78,968 இல் சரிந்தது. இன்றைய வர்த்தகம் குறைந்த அளவில் காணப்பட்டது. மீண்டும், சென்செக்ஸ் 30-பங்கு குறியீடு மீண்டும் உயர்ந்து 79,000 நிலையை அடைந்தது. இருப்பினும், பெஞ்ச்மார்க் குறியீடு இன்னும் 800 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 79,784.53 இல் உள்ளது. வங்கி நிஃப்டி இன்று 53,595-க்கு சரிந்து, தொடக்க நிலையில் சில நிமிடங்களிலேயே 53,525.50 என்ற வர்த்தகத்தை எட்டியது. முன்னணி வங்கிப் பங்குகளில் விற்பனை அதிகமாக இருந்தது.
இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு காரணங்கள் என்ன?
இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட சரிவுக்கு இந்த ஐந்து முக்கிய காரணங்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் மோதல் எதிர்பார்த்தை விட பதற்றத்தை ஏற்படுத்தியது, பலவீனமான உலகளாவிய சந்தை, அமெரிக்க டாலர் விலை உயர்வு, கச்சா எண்ணெய் கொள்முதல் விலை மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் உறுதியான எந்த முடியும் எடுக்கப்படவில்லை போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.
நிப்டியின் நம்பிக்கை:
இன்றைய மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சிறிது வீழ்ச்சி டைந்தாலும் நிப்டி 50 குறியீடு இன்னும் 24,000 நிலைகளுக்கு மேல் இருப்பதால் அதை ஒரு சரிவு என்று சொல்ல முடியாது. இருப்பினும், பாகிஸ்தானில் இந்தியாவின் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு சந்தை மிகவும் நிலையற்றதாக காணப்படுகிறது.
கச்சா எண்ணெய்
“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 75 டாலரில் இருந்து சுமார் 60 டாலராக குறைந்த பிறகு, பெரும்பாலான நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் நிலைகளை மாற்றுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
ஆசிய சந்தை நிலவரங்கள்:
டிரம்பின் கட்டணங்களில் 90 நாள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு, அமெரிக்க டாலர் குறியீடு சரிவைக் கண்டது. இருப்பினும், அமெரிக்க நாணயம் மீண்டும் இந்தியாவின் பங்குச் சந்தைக்கு சாதகமாக அமைத்துள்ளது. ஷாங்காய் மற்றும் ஹெங் செங் குறியீடுகள் காலையிலிருந்து சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்படுவதால் ஆசிய சந்தைகள் கலவையுடன் காணப்படுகிறது. இந்திய முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை மறுபரிசீலனை செய்வதற்கும், மீண்டும் முதலீடு செய்வதற்கும் இது உகந்த காலமாக இருக்கும். முதலீட்டாளர்கள் பதற்றம் அடைந்து பங்குகளை விற்கக் கூடாது, தொடர்ந்து சந்தை நிலவரத்தை கண்காணித்து வர வேண்டும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


