இந்திய பங்குச்சந்தையை புரட்டிப்போட்ட அமெரிக்க தேர்தல் ..!!!

வரும் 8 ஆம்  தேதி ,  அமெரிக்காவில்  தேர்தல்  நடைபெற உள்ளது.  இதில்  டொனால்ட் ட்ரம்ப் வெற்றி  பெற  வாய்ப்பு அதிகமாக  உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, முதலீட்டாளர்கள்  முதலீடு செய்வதில்  ஆர்வம்  காட்டவில்லை.

ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார்  என எதிர்பார்கப்பட்ட நிலையில், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி  பெற  வாய்ப்பு அதிகமாக  உள்ளது  என  வெளியான  தகவலை  அடுத்து  தற்போது, இந்திய  பங்கு வர்த்தகம்  பெரிதும்  பாதிக்கபட்டுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிந்து 27527 புள்ளியிலும், அதேபோல நிப்டி 112 புள்ளிகள் சரிந்து 8514 புள்ளியிலும் முடிவடைந்தது.

இதனை  தொடர்ந்து  இன்றைய  வர்த்தகத்தில்,  தேசிய  பங்கு சந்தை  குறியீடு நிப்டி 29 புள்ளிகள் குறைந்து 8484 புள்ளியிலும், மும்பை  பங்குச்சந்தை  குறியீடு சென்செக்ஸ் 96 புள்ளிகள்  குறைந்து 27,430 புள்ளியிலும்  வர்த்தகம்   இறக்கத்துடன்  முடிவுற்றது.

லாபம்  கண்ட   நிறுவனங்கள் :

Hindalco,  infratel, itc, acc உள்ளிட்ட  நிறுவன பங்குகள்  லாபத்துடன்  முடிந்தது.......

இழப்பை சந்தித்த  நிறுவனங்கள் :

Adani ports,Grasim,asianpaint உள்ளிட்ட  நிறுவன பங்குகள்  இழப்பை சந்தித்தன. ....