இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் உற்பத்தியை இரு மடங்காக 2025ம் ஆண்டுக்குள் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.
இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் உற்பத்தியை இரு மடங்காக 2025ம் ஆண்டுக்குள் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.
2022ம் ஆண்டுக்கான உலக எரிசக்தி கொள்கை மாநாட்டில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால்தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 % , எரிவாயுவில் 50% வெளிநாட்டு இறக்குமதி மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது.

ஆனால், வரும்காலத்தில் உள்நாட்டின் தேவைகள் உள்நாட்டிலேயே தீர்க்கப்படும். 2025ம் ஆண்டுக்குள் எண்ணெய் மற்றும்எரிவாயு உற்பத்தி 5 லட்சம் சதுர கிலோமீட்டராவும், 2030ம் ஆண்டுக்குள் 10 லட்சம் சதுர கிலோமீட்டராவகும் உயர்த்த இலக்கு வைத்திருக்கிறோம்
திறந்தவெளி ஏக்கர் அங்கீகாரக் கொள்கை(ஓஏஎல்பி) திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 7சுற்று ஏலம் நடத்தப்பட்டு, 2 லட்சம் சதுரகி.மீட்டரில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நடந்து வருகிறது
இந்தியப் பொருளாதாரம் 2025ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக விரிவடையும், 2030ம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும். அப்போது ஏற்படும் எரிபொருள் தேவையை உள்நாட்டிலேயே நிறைவேற்ற முயல்வோம்.
உலகளவில் எரிபொருள் தேவையில் இந்தியாவின் தேவை 6 சதவீதமாக இருந்து வருகிறது, இது 2050ம் ஆண்டுக்குச் செல்லும்போது இந்தியாவின் தேவை 12 சதவீதமாக அதிகரிக்கும். இந்தியாவின் 80 சதவீத எரிபொருள் தேவையில் நிலக்கரி, கச்சா எண்ணெய், மற்றும் பயோமாஸ் போன்றவை மூலம் நிறைவேற்றப்படுகிறது. 44 சதவீதம்நிலக்கரி எரிபொருள் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது, எரிவாயு 6 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகப்படுத்தி 2030ம் ஆண்டுக்குள் 12 சதவீதமாக அதிகரிப்போம்.

கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தனால் பெட்ரோலில் சேர்க்கப்படுவதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இறக்குமதியைக் குறைப்போம். பெட்ரோலில் தற்போது எத்தனால் 8 சதவீதம் மட்டுமேகலக்கப்படுகிறது, இது 2025ம் ஆண்டுக்குள் படிப்படியாக உயர்த்தப்பட்டு 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். உயிர்கழிவுகளும் எரிக்கப்பட்டு அதன் மூலம் இயற்கை எரிவாயு எடுக்கப்படும்.
இவ்வாறு ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்
