பொருளாதாரத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா ..! 

இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பெருமிதம் தெரிவித்து உள்ளார். சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்தர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரகுராம் ராஜன் இவ்வாறு தெரிவித்து உள்ளார். 

பொருளாதார மேம்பாட்டில் இந்தியா நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதே வேளையில் சீனாவின்  பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.அதாவது, உலக வாங்கி  வெளியிடும் அறிக்கையின் படி, தற்போது இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது என பேசினார்.

அதே வேளையில், 2017 ஆம் ஆண்டுக்கான, உலக வங்கி அறிக்கையின் படி, இந்தியா 6 ஆவது இடத்திலும், சீனா 2 ஆவது இடத்தையும் பிடித்து இருந்தது என்பது கூடுதல் தகவல்.