2023ம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்சியில் பாதிக்கும் அதிகமாக, இந்தியா, சீனா மட்டும், பங்களிப்பு செய்வார்கள் என்று சர்வதேச செலாவணி நிதியம்(IMF) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்சியில் பாதிக்கும் அதிகமாக, இந்தியா, சீனா மட்டும், பங்களிப்பு செய்வார்கள் என்று சர்வதேச செலாவணி நிதியம்(IMF) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகளவில் சப்ளைவுக்கு இடையூறுகள் குறைந்து வருகின்றன, சேவைத்துறை தொடர்ந்து வளர்ந்து வருவதன் காரணமாக இந்த கணிப்பை ஐஎம்எப் வெளியிட்டது.

சர்வதே செலாவணி நிதியம் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: 

அதிக பென்சன் பெற தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழிகாட்டு விதிகள்: இபிஎப்ஓ

2023ம்ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக அதிகரிக்கும், இது 2022ம் ஆண்டில் 3.8 சதவீதமாக இருந்தது. உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் சூழலில் இருந்த கணிப்பு, ஒளியைத் தருகிறது.

உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா, சீனா மட்டும் தனியாக 50 சதவீதத்துக்கு மேலாக பங்களிப்பு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவில் உள்ள பிறநாடுகளும் பங்களிப்பார்கள்.

சீனாவில் கொரோனா பரவல் முடிந்து மீண்டும் பொருளாதார செயல்பாடுகள் இயல்புக்கு வந்துள்ளன. இதனால் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வலுவாக முன்னேறும், எதிர்பார்ப்பைவிட வேகமாக பொருளாதாரம் வளர்ச்சி பெறும்

கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை கொரோனாவுக்கு முன்பு இருந்த வளர்ச்சியைப் பெறும். சீனாவின் அதிக வளர்ச்சியின் ஒவ்வொரு சதவீத புள்ளியிலும், ஆசியாவின் மற்ற பகுதிகளில் உற்பத்தி சுமார் 0.3 சதவீதம் உயர்கிறது.இந்த வளர்ச்சியால், ஆசியா முன்னேறிய பொருளாதாரங்களுக்கான வாய்ப்புகளும் கலந்துள்ளன.

நிதிஆயோக் சிஇஓ-வாக முன்னாள் வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் நியமனம்: யார் இவர்?

ஆசிய மண்டலத்தில் பணவீக்கம் இந்த ஆண்டு மிதமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் கமாட்டி விலைக் குறை காரணமாக, மத்திய வங்கிகளின் இலக்கிற்குள்ளாகவே பணவீக்கம் அடுத்த ஆண்டு கட்டுக்குள் வந்துவிடலாம். அதேநேரம், பணவீக்கம் சரியான திசையில் செல்கிறதா, மொத்த பணவீக்கம் இலக்கைவிட அதிகரித்துள்ளதா என்பதை அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள், தொடர்ந்து கண்காணிப்பில்இருப்பது அவசியம்

இந்தியாவில் உணவுப் பொருட்கள், மற்றும் கமாடிட்டி விலை உயர்வால், பணவீக்கம் கடந்த 3மாதங்களி்ல் இல்லாத அளவாக 6.25சதவீதமாக உயர்ந்திந்தது இதனால் கடந்த 8ம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 25 புள்ளிகள் உயர்த்தி 6.50 சதவீதமாகஅதிகரித்தது.

இன்னும் பணவீக்கம் இந்தியாவில் கட்டுக்குள் இல்லை என்பதால், வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு ஐஎம்எப் தெரிவித்துள்ளது