increased the tax for cinema ticket for above 100
ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் கடந்த 3 வாரங்களாகவே நடந்து வருகிறது. அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பு குறைக்கப் படலாம்? எந்தெந்த பொருட்களுக்கு வரிவிதிப்பு அதிகரிக்கலாம் என ஆலோசனைகள் நடைபெற்று தற்போது 1,211 பொருட்களுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டது .
இது வரை வரி நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களில், 500 பொருட்களுக்கு வரி நிர்ணயத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மாநில அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட துறையில் சினிமா துறையும் ஒன்று.
டிக்கெட் விலை
ரூ.100க்கு மேல் சினிமா டிக்கெட் - 28 சதவீத வரியும்,
ரூ. 100க்கு கீழ் சினிமா டிக்கெட் - 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா மோகம் அதிகம் கொண்டவர்கள் எவ்வளவு வரி இருந்தாலும் சினிமா பார்க்காமல் இருக்க போவதில்லை.ஆனால் டிக்கெட் விலை உயரும் தருவாயில், சினிமா பிரியர்கள் கொஞ்சம் தயங்கவும் செய்வார்கள்.
இன்னும் எந்தெந்த துறையில் எந்த மாற்றம் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
