எத்தன கோல்மால் பன்னாலும் பிடிக்காம விடமாட்டேன்......!!! சபதம் எடுக்கிறார் மோடி......!!!
ரூபாய் நோட்டு செல்லாது குறித்த பிரதமரின் அதிரடி அறிவிப்பால் , ஆடிப்போன பல பண முதலைகள், எத்தனையோ குறுக்கு வழிகளை பயன்படுத்தி கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு மாற்றி உள்ளனர்.
அதிலும் குறிப்பாக , தங்கம் வாங்கி வைத்துள்ளது, முன் தேதியிட்டு விலையுர்ந்த பொருட்களை வாங்கியதாக கணக்கு காமிப்பது, கமிஷன் அடிப்படையில் கருப்பு பணத்தை மாற்றி வைத்துள்ளது என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதெல்லாம் ஓகே ......அடுத்து எப்படி கணக்கு காமிப்பது என , திட்டம் தீட்டும் சிலர் , இந்த யோசனையை கையில் எடுத்துள்ளனர்.....
அதாவது, தற்போது இருக்கும் கருப்பு பணத்தை வெளியிடாமல், கடந்த வருட கணக்கில் திருத்தி அமைத்து குறைவான வரியை செலுத்தி அதனை வெள்ளையாக்க முயற்சி எடுத்து வருகின்றனர்…….
சொல்ல போனால், வருமான வரி சட்டம் 139(5)-ன் படி, ஏதாவது தகவலை வருமானவரி கணக்கில் காமிக்க தவற விட்டிருந்தாலோ, அல்லது தவறான வருமான வரியை சமர்ப்பித்து இருந்தாலோ மட்டும் , கடந்த ஆண்டு வருமான வரி கணக்கில் மாற்றம் செய்யும் வசதி உள்ளதே தவிர, அதிக மாற்றம் தரும் வகையில் தற்போது புதிதாக ஒரு கணக்கு காமித்து, சென்ற ஆண்டு வருமான வரி கணக்கில் சேர்க்க முற்பட்டால், அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு எந்த அளவிற்கு வலிமையாக முடிவு எடுக்கிறது என்றும் அதே சமயத்தில் மக்களின் ஒத்துழைப்பும் கண் கூடாக பார்க்கமுடிகிறது.
எது எப்படியோ, ராஜா ராணி விளையாட்டில் கடைசியில் திருடனை கண்டுப்பிடித்தால் தானே , விளையாட்டு முழுமை பெரும்.......!!!
