கவுரவ விரிவுரையாளராக(கெஸ்ட் லெக் ஷர்)சென்று பங்கேற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று கர்நாடக அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங்(ஏஏஆர்) விளக்கம் அளித்துள்ளது.

கவுரவ விரிவுரையாளராக(கெஸ்ட் லெக் ஷர்)சென்று பங்கேற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று கர்நாடக அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங்(ஏஏஆர்) விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த சாய்ராம் கோபாலகிருஷ்ண பாட் என்பவர், கெஸ்ட் லெக்ஸர் மூலம் ஈட்டும் வருமானம் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு உட்பட்டதா என்று கர்நாடக அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங்கிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இது குறித்து அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங்(ஏஏஆர்) விளக்கம் அளித்துள்ளது, அதில் “ தொழில்முறை, தொழில்நுட்ப, வர்த்தக சேவை போன்றவை ஜிஎஸ்டி வரியில் விதிவிலக்குப் பிரிவில் வராது. இந்த சேவையிலிருந்து பெறும் வருமானத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

கவுரவ விரிவுரையாளராக இருப்போர், தொழில்முறையில் ஆலோசனைகள் சேவைகள் வழங்குவோர், ஆண்டுக்கு விற்றுமுதல் ரூ.20 லட்சதுக்கு அதிகமாக இருப்போர் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது

ஏஎம்ஆர்சி அன்ட் அசோசியேட்ஸ் சீனியர் பார்டனர் ராஜத் மோகன் கூறுகையில் “ கர்நாடக ஏஏஆர் அளித்த விளக்கத்தின் மூலம் ப்ரீலான்ஸிங் முறையில் லட்சக்கணக்கில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர்தங்கள் விலைஉயர்ந்த அனுபவங்களையும், கல்வியறிவையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக குறிப்பிட்ட தொகையை பெற்று வந்தனர். இனிமேல், அவர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் வருவார்கள். 

பல்வேறு நிறுவனங்களில் பகுதிநேர வழிகாட்டிகளாக, பயிற்றுனர்களாக, ஆலோசகராக இருந்துவருபவர்களும் இனிமேல் ஜிஎஸ்டி வரிக்குள் வந்து 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.