illegal phone calls in the name of bank
சென்னை நகரில் உள்ள ஒருசில வங்கிகளின் தலைமை அதிகாரி என்று கூறி ஏடிம் கார்டுகளின் நம்பர்கள் மற்றும் ஓடிபி எண்களை கூறினால் கணக்கில் உள்ள பணத்திற்கு பங்கம் ஏற்படுவதால் பீதி கிளம்பியுள்ளது வாடிக்கையாளர்களுக்கு…
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பேசுவதாக செல்போன்க ளில் அழைப்புகள் வரும். எதிர்முனையில் இருப்பவர் தான் வங்கியின்
மேலதிகாரி என்று குறிப்பிடுவதன் உங்களது டெபிட் கார்டு எண்களை கேட்டறிவார்கள். பின்னர் ஒடிபி எண்களையும் தெரிந்து கொண்டு ஆன்லைனில் பர்சஸ் செய்து உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்வாகா செய்து விடுவார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் பணிபுரியும் காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு இதேபோல் அழைப்பு வந்து பணத்தை இழந்துள்ளார். இது குறித்து அவர் மாநகர காவல்துறை ஆணையரிடம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஈமெயில்களிலும் பரிசு விழுந்துள்ளதாக அறிவிப்புகள் வரும். அதில் உங்களது வங்கியின் மொத்த விபரமும் கேட்கப்படும். அவற்றை கொடுத்தால் பணத்திற்கு பட்டைதான்.
இந்த நூதன மோசடி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது புதுதில்லியில் உள்ள நொய்டாவில் இருக்கும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க காவல்துறை ஆணையர் தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டுள் ளார்.
