Asianet News TamilAsianet News Tamil

DGCA: இலவச விமான டிக்கெட், பணம் வாபஸ் ! விமான டிக்கெட் விதிமுறையில் மத்திய அரசு விரைவில் புதிய மாற்றம்

பயணிக்கு வழங்கப்பட்ட விமான டிக்கெட் நிலையில் தரம் குறைக்கப்பட்டால் அவருக்கு இலவச விமான டிக்கெட், டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்கும் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

If travellers are degraded by airlines, the DGCA advises full refunds and free flights.
Author
First Published Dec 24, 2022, 5:03 PM IST

பயணிக்கு வழங்கப்பட்ட விமான டிக்கெட் நிலையில் தரம் குறைக்கப்பட்டால் அவருக்கு இலவச விமான டிக்கெட், டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்கும் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

அதாவது ஒரு பயணிக்கு ப்ரீமியம் எக்கானமிவகுப்பில் டிக்கெட் கொடுத்து, கடைசி நேரத்தில் அந்தப் பயணிக்கான டிக்கெட் தரத்தை எக்கானமியாக் குறைக்கும் பட்சத்தில் இந்த சலுகைகளை விமான நிறுவனங்கள் வழங்கிட வேண்டும்

ஆக்சிஜன் சிலிண்டர்கள இருப்பைச் சரிபாருங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

இந்த புதிய விதிகளை இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளன

பல நேரங்களில், குறிப்பாக சீசன் நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிக்கு அவர்  முன்பதிவு செய்த இடத்தில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை. அதற்கு மாறாக டிக்கெட் தரம் குறைக்கப்பட்டு அடுத்த வகுப்பில் ஒதுக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் அடிக்கடி விமானநிறுவனங்களில் நடக்கின்றன. விமானங்களை மாற்றுதல், அதிகப்படியான புக்கிங், டிக்கெட் சேராமல் போகுதல் போன்றவற்றால் இவை நடக்கின்றன

இதுபோன்ற சம்பவங்களால் விமானநிறுவனங்கள் எளிதாக தங்கள் வேலையை மாற்றிக்கொள்கின்றன. ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தவிர்க்கவே, பயணிகளுக்கு ஆதரவாக விமானப் போக்குவரத்துத தேவைச் சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

சீனா உள்பட 4 நாடு பயணிகளுக்கு RTPCR கொரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு அதிரடி

இதற்கான வரைவு சட்டங்களை விமானப் போக்குவரத்து அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது அதில் மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு பயணி புக்கிங் செய்து உறுதி செய்யப்பட்ட வகுப்பிலிருந்து தரம் குறைத்தாலோ அல்லது விமானத்தை ரத்து செய்தாலோ அந்த பயணிக்கு டிக்கெட் கட்டணத்தை வரி உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து திரும்ப வழங்கிட வேண்டும், அல்லது அடுத்த ஒருமணிநேரத்தில் வேறு விமானத்தில் டிக்கெட் பெற்று வழங்கிட வேண்டும்.

முன்பதிவு செய்யத விமானத்துக்கு பதிலாக வேறு விமானம் 24மணிநேரத்துக்குள் இருந்தால்,  அந்தப் பயணிக்கு ஒரு வழி கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணத்தில் 200 சதவீததத்தை விமானநிறுவனம் வழங்க வேண்டும்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா, பிரியங்கா காந்தி இணைந்தனர்

முன்பதிவு செய்யத விமானத்துக்கு பதிலாக வேறு விமானம் 24மணிநேரத்துக்குப்பின் இருந்தால், அந்தப் பயணிக்கு  இழப்பீடு ஒரு வழிக் கட்டணத்தில் 400 சதவீதம் மற்றும் எரிபொருள் கட்டணம் வழங்கிட  வேண்டும். ஒரு பயணி மாற்று விமானத்தைத் தேர்வு செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் முழுப் பணத்தையும், ஒரு வழி பயணக் கட்டணத்தில் 400 சதவீதத்தையும் எரிபொருள் கட்டணத்தையும் சேர்த்து ரூ. 20,000 என்ற உச்சவரம்புடன் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios