if adhar is must for marriage can prevent afffiars

“திருமணம்” செய்வதற்கும் “ஆதார்” கட்டாயமாக்கப்பட்டால் ....தடைபடுமா திருட்டு திருமணம்...?

எங்கும் ஆதார் எதிலும் ஆதார் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆதார் இல்லை என்றால் மாநில அரசின் பொது விநியோக பொருட்கள் முதல் புதிய சிம், வாகனம், டிரைவிங் லைசன்ஸ் என அனைத்திலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு எடுத்து வரும் இந்த முயற்சி உண்மையில் பாரட்டத்தக்கது.அதே வேளையில் ஏன் அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது என சிந்தித்தால், அதற்கான பதிலை மத்திய அரசு தெளிவாக கூறுகிறது.

அதாவது ஊழல் இல்லாத ஒரு சமூதாயத்தை உருவாக்கவும் , பல துறைகளில் நிகழும் பல முக்கிய குற்ற செயல்களை தடுக்கவும் ஆதார் பெரிதும் உதவும் . மேலு ஒரு நபரின் அனைத்து விவரத்தையும் ஒரே ஒரு ஆதார் எண்ணை கொண்டு அறிந்துகொள்ள முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது . அப்படி இருக்கும் போது, தற்போது திருமணம் செய்வதற்கும் ஆதார் கட்டாயமாக்கப் பட்டால், ஆண்கள் பெண்களை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதையும், சட்ட விரோதமாக செய்யப் படும் இரண்டாவது திருமணம் செய்வதையும் தடுக்க முடியும்.

ஆகவே ஆதார் எண் என்பது , ஊழலை மட்டும் தடுப்பதற்கு அல்ல, சட்ட விரோதமாக நடைபெறும் திருமணத்தையும் தடுத்து நிறுத்தும் என மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து பலரும் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் .