கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் முதல்படியே சரியான கிரெடிட் கார்டை நாம் தேர்வு செய்வதுதான். என்ன குழப்புகிறேன் என்று பார்க்கிறார்களா!
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் முதல்படியே சரியான கிரெடிட் கார்டை நாம் தேர்வு செய்வதுதான். என்ன குழப்புகிறேன் என்று பார்க்கிறார்களா!
நம்முடைய தேவைக்கு ஏற்ற கிரெடிட் கார்டை வாங்க வேண்டும். நம்மைத் தேடி வந்து கிரெடிட் கார்டு கொடுக்கிறார்களே என்பதற்காக அனைத்து நிறுவனங்களி்ன் கார்டுகளையும் வாங்கி வைத்து, செலவு செய்துவி்ட்டு பில்கட்டமுடியாமல் திணறக்கூடாது.

சந்தை வல்லுநர்கள் கூறுகையில் “ புதிதாக வேலையில் சேரும் இளைஞர்கள் மத்தியில் ஒரு டிரண்ட் இருக்கிறது. அதிகமான கிரெட்டிட் கார்டுகளை வாங்கி செலவு செய்து, ரிவார்ட் பாயின்ட்களைப் பெற நினைக்கிறார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கும்போது, உங்களின் செலவுகளைக் கண்காணிக்க முடியாமல், பணம் செலுத்தும் தேதிகளை மனதில் வைக்காமல் இருந்தால், கிரெடிட்கார்டு என்பது சுகமல்ல அது சுமையாகத்தான் மாறும்” என எச்சரிக்கிறார்கள்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள்:மன்மோகன் சிங் விளாசல்
எம்-பாக்கெட் நிறுவனத்தின் சிஇஓ கவுரவ் ஜலான் கூறியதாவது
“ ஒருவர் இயல்பிலேயே தன்னுடைய செலவு என்பதை புரிந்துகொண்டு, ஆய்வு செய்தபின் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு செலவுக்கும் ஒவ்வொரு விதமான கார்டு இருக்கின்றன. உதாரணமாக ஷாப்பிங் செய்ய, விமான டிக்கெட் புக் செய்ய, உணவகங்களில் சாப்பிடுவதற்கு, வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவதற்கு, ஆன்-லைனில் பொருட்கள் வாங்கி இ-எம்ஐயில் செலுத்த என பல கார்டுகள் உள்ளன

ஆதலால் நாம் எதற்கு அதிகமாக செலவிடுவோம் எனத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் கார்டை வாங்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு நிறுவனமும் கார்டு தரும்போது அதன் வட்டி வீதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ரிவாண்ட் புள்ளிகள் எவ்வாறு தருவார்கள், கார்டு லிமிட் எவ்வளவு, ஆண்டு கட்டணம், பேலண்ஸ் டிரான்ஸ்பர், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்
ஆனால், கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலரும் இதை கவனிப்பதில்லை, இதில் அக்கறை செலுத்துவதில்லை. பொருட்களை கிரெடிட் கார்டில் வாங்கிவிட்டோம். பில்கட்டும் தேதி வந்தவுடன் "மினிமம் ரீபேமென்ட்" மட்டும் செலுத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் வாங்கிய கடன் திருப்பிச்செலுத்தவில்லை செலுத்தியது வட்டிதான் என்பதும், உங்களை மேலும் மேலும் கடனில் தள்ளும் வழி என்பதையும் மறந்துவிடக்கூடாது.
மிஸ் பண்ணிடாதிங்க! இளைஞர்களுக்கு இன்போசிஸ் வழங்கும் பொன்னான வாய்ப்பு
கடனில் சிக்குவதைத் தவிர்க்க, உங்கள் செலவுகளக் கண்காணிக்கவும், கிரெடிட்கார்டு செலவுகளை அவ்வப்போது கண்காணிப்பதும், பேமெண்ட் தேதியை கவனித்து வருவதும் முக்கியம்.

ஆனால், உங்களிடம் பல்வேறு நிறுவனங்களின் கிரெடிட் கார்டு இருந்து பல கார்டுகளைப் பயன்படுத்தினால், எந்த கார்டில் எவ்வளவு செலவிட்டேன் என்பதையும் தெரிந்துகொள்ள முடியாமலும், புரிந்துகொள்ள முடியாமலும் போகலாம். ஆதலால், ஒவ்வொரு செலவுக்கும் ஒரு கார்டை வைத்துக்கொள்ளுதல், அல்லது ஒரே கார்டை மட்டும் பயன்படுத்துவது நல்லது
கிரெடிட் கார்டு கடன் என்பது திருப்பிச் செலுத்தாதவரை கடன்தான். ஒவ்வொரு மாதமும் கடனைத் திருப்பிச் செலுத்த திட்டமிட வேண்டும். வட்டி, பேலன்ஸ், பயன்பாடு,எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதை தெரிந்து செயல்பட்டால் சிறப்பாகும்.
ஆண்டுக்கு ஒருமுறையாவது நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டு குறித்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும். உங்களின் செலவுகள், திருப்பிச்செலுத்தும் முறை ஆகியவற்றை கவனிக்கும்போது, அது உங்கள் செலவு செய்யும் விதத்தைப் புரிந்து கொள்ள உதவும்.
கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு சிரமமாகஇருந்தால், அனைத்து கடன்களையும், பேலன்ஸ் டிரான்ஸ்பர் வாய்ப்பின் மூலம் ஒன்று திரட்டி ஒரே கார்டில் கொண்டுவரமுடியும். எந்த வங்கியின் கிரெடிட் கார்டு குறைந்த வட்டி எடுக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு அனைத்து கார்டுகளின் பில்களையும் அந்த கார்டில் செலுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பில் செலுத்துவதை கண்காணிக்க முடியும், செலவைக் கட்டுப்படுத்த முடியும்.

கிரெடிட் கார்டில் அதிகமான கட்டணம் ஏதேனும் வந்துவிட்டதா, ஸ்டேட்மென்ட் புரியவில்லையா, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளத் தயங்கக் கூடாது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஸ்டேட்மென்ட்டையே பார்க்காமல் பில் கட்டுகிறார்கள், இதனால் இதர கட்டணங்கள் குறித்து தெரிவதில்லை. கிரெடிட் கார்டிலிருந்து அதிகமாக பயன்பெற புள்ளிகளை விரைவில் ரீடீம் செய்து அதனை கேஷ்பேக்காக வாங்கலாம் அல்லது வேறு ஏதாவது செலவுக்கோ அல்லது மீண்டும் கிரெடிட் கார்டு கடனை அடைக்கக்கூட பயன்படுத்தலாம்.
இவ்வாறு ஜலான் தெரிவித்தார்
