atm: atm pin generate: ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? புதிதாக பின் நம்பர் உருவாக்க பல வழிகள்
வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கியவுடன் நமக்கு அளிக்கப்படும் ஏடிஎம் கார்டை பாதுகாப்பாக வைத்திருப்பதும், அந்த கார்டின் மூலம் நடக்கும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதும் அவசியமானது.
வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கியவுடன் நமக்கு அளிக்கப்படும் ஏடிஎம் கார்டை பாதுகாப்பாக வைத்திருப்பதும், அந்த கார்டின் மூலம் நடக்கும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதும் அவசியமானது.
2023ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் 45 டாலராக வீழ்ச்சி அடையும்: ஆய்வில் தகவல்
இதற்கு அடிக்கடி ஏடிஎம் கார்டின் பின் எண்ணை அடிக்கடி மாற்றுவது அவசியமாகும். அதேசமயம் நாம் உருவாக்கிய பின் எண்ணை மறந்துவிட்டாலும்கூட, புதிதாக பின் எண்ணெ உருவாக்குவதற்கும் எளிதாக பல வழிகள் உள்ளன. எப்படி என பார்க்கலாம்.
ஏடிஎம் மையத்தில் உங்கள் ஏடிஎம் கார்டு புதிதாக பின் எண் உருவாக்கும் வழிகள்
1. எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கியின் ஏடிஎம் மையத்துக்குச் செல்ல வேண்டும்.
2. ஏடிஎம் எந்திரத்தில் கார்டை சொருகி, உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம்
3. திரையில் இருக்கும் பின் எண் உருவாக்கும் வசதியை கிளிக் செய்ய வேண்டும்
4. வங்கியில் அளித்துள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
5. ஒருவேளை பிறந்த தேதி கேட்டால், அதை தேதி, மாதம், ஆண்டு வாரியாக பதிவிட வேண்டும்
6. வங்கியில் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு Otp எண் வரும்
7. புதிய பின் எண்ணை பதிவு செய்து, அதை உறுதி செய்ய வேண்டும்
வங்கியில் சென்று எவ்வாறு புதிய எண்ணை உருவாக்குவது?
எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கிக்கு நேரில் சென்று, ஏடிஎம் கார்டுக்கு பின் எண் உருவாக்கித் தருமாறு விண்ணப்பம் அளிக்கலாம். புதிய பி்ன் எண்ணை வங்கி உருவாக்கி, அதை உங்களுக்கு மின்அஞ்சல் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்புவார்கள்.
சர்வீஸ் சார்ஜுடன் சேர்த்து ஹோட்டல் பில்லில் கொடுத்தால் என்ன செய்வது? விரிவான பதில்கள்
ஏடிஎம் கார்டு இல்லாமல் பின் எண்ணை எவ்வாறு மாற்றலாம்?
நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் கிளை அல்லது வங்கிக்கு நேரில் செல்வதைத் தவிரத்து புதிதாக பலவழிகளில் ஏடிஎம் பின் எண்ணை உருவாக்கலாம்.
இன்டர்நேட் பேங்கிங்:
நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் இன்டர்நெட் பேங்கிங்கில் சென்று புதிதாக பின் உருவாக்குவது குறித்து விண்ணப்பித்து பின் எண் பெறலாம்.
வாடிக்கையாளர் சேவை:
வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு புதிகாக பின் எண் வழங்கக் கோரலாம்.
எஸ்எம்எஸ் பேங்கிங்:
எஸ்எம்எஸ் மூலம் ஏடிஎம் பின் எண்ணை மாற்ற வேண்டும் எனக் கோரி வங்கி அளித்துள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, புதிய பின் எண் பெறலாம்.
3 ஆண்டுகளில் இல்லாத அளவு ஐடிசி பங்குகள்விலை உயர்வு: 10% அதிகரிப்பு: பங்குகளை விற்கலாமா?
ஏடிஎம் மோசடிகளில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது?
1. யாரிடமும் எந்த காரணத்தைக் கொண்டும் ஏடிஎம் பின் எண்ணை கூறக்கூடாது.
2. ஏடிஎம் பின் எண்ணாக பிறந்த தேதி அல்லது மொபைல் எண்ணை சேமிக்கக் கூடாது.
3. சந்தேகத்துக்கு இடமான இணையதளங்கள் வழியாக, எந்தவிதமானப் பரிமாற்றமும்செய்யக் கூடாது.
4. பொதுவெளியில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் பின் எண்ணை பதிவு செய்யும் போது கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருத்தல் அவசியம்.
5. ஏடிஎம் பரிமாற்றம் முடிந்தபின் வரும் ரசீதுகளை கவனத்துடன் அப்புறப்படுத்தலாம் அல்லது, எடுத்துச் சென்றுவிட வேண்டும்.