Asianet News TamilAsianet News Tamil

ஆதார் அட்டை மூலம் உடனடியாக ரூ.50,000 கடன் பெறலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. சம்பளச் சீட்டுகள் இல்லாமலேயே ஆதார் அட்டை மூலம் விரைவாக கடன் பெற வங்கிகள் வழிவகுக்கின்றன.

How to get instant loan rs 50,000 through aadhaar card Rya
Author
First Published Aug 19, 2024, 10:21 AM IST | Last Updated Aug 19, 2024, 10:21 AM IST

வீட்டுக்கடன், தனிநபர் கடன் என எந்த கடன்களையும் வங்கிகளில் பெற வேண்டும் என்றாலும் இன்று KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உங்களின் பயோமெட்ரிக்ஸ் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதால், தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து, ஆதார் எண்ணை வழங்குவது என்பது முக்கியமான செயல்முறையாகும். ஆனால் ஆதார் மூலம் நீங்கள் தனிநபர் கடன்களை பெற முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?.

தனது சம்பள் அறிக்கை இல்லாமல், ஆதாருடன் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் கடைசி ஆறு மாத வங்கி அறிக்கையை வழங்க வேண்டும். அவர்கள் பதிவேற்றியதும், வங்கிகள் விவரங்களை மதிப்பிட்டு, தனிநபர் கடனை இறுதி மதிப்பீடு செய்வார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு தனிநபருக்கு ஆதார் அடிப்படையில் ரூ. 5,000 மற்றும் 25 லட்சம் வரை பெறலாம்.

கிரெடிட் கார்டை வைத்திருக்கிறீர்களா.. பேங்க் உங்களுக்கு தினமும் 500 ரூபாய் கொடுக்கும்!

ஆதார் அட்டை மூலம் கடன் பெறும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? UIDAI ஆல் வழங்கப்பட்ட தனிப்பட்ட ஆதார் அட்டையை தனிநபர் வைத்திருக்க வேண்டும். 20 முதல் 60 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் மாதம் 15,000 ரூபாய் சம்பாதிக்கும் சம்பளம் பெற்றவராக அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும். தனிநபரின் கிரெடிட் ஸ்கோர் 600 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது வேலை செய்ய வேண்டும்

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

ஆதார் அட்டை: வசிப்பிடத்தையும் அடையாளத்தையும் சரிபார்க்கப் பயன்படும் முதன்மை ஆவணம். வருமானச் சான்று: வருமானச் சான்றிதழ்கள், வங்கி அறிக்கைகள் அல்லது ஊதியச் சீட்டுகளை வழங்கவும்.
பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்: சில கடன் வழங்குபவர்களுக்கு சமீபத்திய புகைப்படம் தேவைப்படலாம்.
வயதுச் சான்று: பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் ஐடி வடிவில் வயதுச் சான்றினை வழங்கவும்.

ஆதார் அட்டை மூலம் எப்படி கடன் பெறுவது?

நீங்கள் விண்ணப்பிக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
உங்கள் தனிப்பட்ட மற்றும் கடன் விவரங்களை உள்ளிடவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
சரிபார்ப்புக்காக காத்திருக்கவும்.
கடன் ஒப்புதல் மற்றும் விநியோகத்தைப் பெறுங்கள்.
ஒரு நெகிழ்வான கடன் காலத்தை தேர்வு செய்யவும்.

ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? இந்தத் திட்டத்தில் இணைவது எப்படி?

நிதி நெருக்கடிகளைத் தணிப்பது முதல் எதிர்பாராத வீட்டுச் செலவுகளை நிர்வகிப்பதற்கு உதவுவது வரை பல வகைகளில் தனிநபர் கடன்கள் உதவுகின்றன. அதிலும் அதற்போது ஆதார் அட்டையின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், சம்பளச் சீட்டுகள் அல்லது தனிநபர் கடனுக்குத் தேவைப்படும் பிற ஆவணங்கள் இல்லாமல் ஆதார் அட்டை மூலம் கடன் பெறும் வழிமுறைகளை பல வங்கிகள் செயல்படுத்தி வருகின்றனர். எனவே அவசர தேவைக்காக கடன் பெற விரும்புவோர் தங்கள் ஆதார் அட்டை மூலம் கடனுக்கு விண்ணப்பித்து சில மணிநேரங்களில் ரூ.50,000 கடன் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios