நாள் முழுவதும் வேலை செய்து மாதம் தோறும் சம்பளம் வாங்கும் நம்மவர்களுக்கு, மாத கடைசியில்  கையில் ஒன்றுமில்லை என கூறுவதை பாப்போம்..

அதுவும் முன்பெல்லாம் குடும்ப தலைவன் மட்டும் வேலை செய்தால் போதும் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் இன்றோ நிலைமை அப்படி இல்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் தேவைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதற்கேற்றவாறு சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் அல்லாவா...?

இதில் எங்கிருந்து வாங்குவது சொந்த வீடு...? மாதம் தோறும் வாடகை கட்டுவதற்கே சரியாக இருக்கும்.அதெல்லாம் சரி அப்படி என்றால் எப்படி தான் நிலைமையை சமாளிப்பது என்று தோன்றும் அல்லவா..?

ஆம்..சென்னை போன்ற பட்டிணத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்குவதற்கு குறைந்த பட்சம் நாற்பது லட்சம் ஆகும் அல்லவா..?நாற்பது லட்சம் கொடுத்து ஒரு வீட்டை வாங்கி அதற்கு முப்பது ஆண்டுகளாக லோன் போட்டு கஷ்டப்பட வேண்டும். அதற்கு பதிலாக ஒரு இருபது லட்சத்தில் ஒரு பிளாட் வாங்கி, பத்தாயிரம் ரூபாய்க்கு வாடகை  விடலாம்.

அப்படி என்றால் எங்கு வாங்க வேண்டும் எப்படி சாத்தியம்..அதற்கு மட்டும் லோன் போட வேண்டாமா   என்று நீங்கள் கேட்பீர்கள் அல்லவா..? அனைத்தும் சாத்தியமே...

ஒரு வீடு வாங்க முன்பணமாக, குறைந்தது ஐந்து லட்சமாவது ரொக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்...மத்திய அரசின் திட்டம் மூலம், முதல் முறையாக வீடு வாங்கும் நபர்களுக்கு 2.65 லட்சம் வேறு நமக்கு கிடைக்கும்... மீத பணத்திற்கு மட்டும் லோன் போட்டுக்கொண்டு, மாதம் மாதம் இஎம்ஐ ஒரு 8 ஆயிரம் கிடைக்கும் படி செய்துக் கொள்ளலாம்.

இப்போது சின்ன கணக்கு..! 

இருபது லட்சம் கொண்டு ஒரு பிளாட் வாங்கி அதில் வாடகையாக கிடைக்கும் பத்தாயிரம் ரூபாயில் 8  ஆயிரம் இஎம்ஐ ஆகவும், இரண்டாயிரம் நீங்கள் ஏற்கனவே இருக்கும் வீட்டிற்கு கொடுக்க வேண்டிய  வாடகை பணத்தில் சேர்ந்துக்கொடுத்தால் நமக்கு நன்மை தானே...

சரி அது எப்படி வாடகை மட்டும் பத்தாயிரம் கிடைக்கும் என்று தானே கேட்கிறீங்க..?

ஆம்.. சென்னையை பொறுத்தவரை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும், OMR, ECR இடங்களில் மென் பொறியாளர்கள் தங்க ஒரு தனி அரை கொண்ட பிளாட்டுக்கு பத்தாயிரம் வாடகை வரை கொடுக்கிறார்கள்...

அதே போன்று, நிறுவனங்கள் அதிகரித்து உள்ள சிப்காட் பகுதியான ஒரகடம் மற்றும் பேரம்பாக்கம், ஸ்ரீ பெரும்பத்தூர் பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் இரு அரை கொண்ட பிளாட் 20 லட்ச  மதிப்பில் பிளாட் வாங்கினால் அதற்கு பத்தாயிரம் வரை வாடகையாக கிடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.