Asianet News TamilAsianet News Tamil

மூத்த குடிமக்களின் ஓய்வூதியம், டெபாசிட் வருமானத்திற்கு வரியா? இனி கட்ட வேண்டாம்; இதை மட்டும் செய்தால் போதும்!!

மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் பெரும்பாலும் ஓய்வூதியம் மற்றும் வங்கிகளில் இருந்து பெறப்படும் வட்டிகளுக்கு வரி செலுத்தும் நிலை ஏற்படுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களில் பலருக்கும் வரி அமைப்பு முறைகள் மற்றும் அதில் இருந்து எவ்வாறு விலக்கு பெறுவது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

How can senior citizens and pensioners avoid paying tax
Author
First Published Dec 5, 2022, 3:56 PM IST

ஓய்வூதியம் மற்றும் வங்கிகளில் இருந்து பெறப்படும் வட்டிகளுக்கு வரி செலுத்துவதை தவிர்க்கலாம். ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் ரூ.7,99,000 வரை பெறப்படும் வருமானத்திற்கு வரி செலுத்துவதை தவிர்க்கலாம். ஓய்வூதிய வருமானம் மற்றும் வைப்புத்தொகையில் வங்கியில் இருந்து பெறப்படும் வட்டி ஆகியவை இதில் அடங்கும். ஓய்வூதியம் பெறுபவர்கள், மூத்த குடிமக்களாக  இருந்தால், வருமான வரிச் சட்டம், 1961ன் கீழ் மத்திய அரசு உங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

ஓய்வூதியம், வங்கி வட்டி மீது வரி சேமிப்பது எப்படி? 
உங்களின் ஓய்வூதிய வருமானம் 5 லட்சம் ரூபாய், வைப்புத் தொகை மீது வங்கிகளில் இருந்து கிடைக்கும் வட்டி 2,49,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். ஆக, உங்களது மொத்த வருமானம் சுமார் ரூ.7,99,000. இந்தக் கணக்கீட்டின்படி, நீங்கள் பழைய வரி முறையை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது, வருமான வரித் துறையானது உங்களது ஓய்வூதிய வருமானத்தில் ரூ. 50,000, வங்கி டெபாசிட் வட்டியில் (80TTB பிரிவின் கீழ்) கிடைக்கும் வருமானத்தில் இருந்து ரூ. 50,000 மற்றும் மருத்துவத்திற்காக ரூ. 50,000 பெற வரிச் சலுகை பெறுவதற்கு அனுமதிக்கிறது. இந்த மூன்றையும் உங்களது மொத்த வருமானத்தில் இருந்து கழித்துவிட்டால், தற்போது வரிக்கு உட்பட்ட உங்களது வருமானம் ரூ. 6,49,000 ஆக குறைகிறது. 

Gold Rate Today: தங்கம் விலை கிடுகிடு உயர்வு! சவரனுக்கு ரூ.200க்கு மேல் ஏற்றம்: இன்றைய நிலவரம் என்ன?

இத்துடன் மேலும் வரி குறைவதற்காக, வருமான வரிச் சட்டம் பிரிவு  VI-A-ன் கீழ் பிபிஎப் ரூ. 1,50,000 முதலீடு செய்தால், உங்களது நிகர வரி விதிப்பு வருமானம் ரூ.4,99,000 ஆக குறைக்கப்படும். தற்போது உங்களது வருமானம் அரசு நிர்ணயித்த ரூ.5 லட்சத்திற்குள்  வந்துவிட்டது. இதற்கு வரி விலக்கு உண்டு. 

குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வருமானத்திற்கு ஜீரோ வட்டி  கணக்கிடப்படுகிறது. இருப்பினும், ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான நிகர வரிக்கு உட்பட்ட வருமானத்திற்கு, தற்போதுள்ள வரி விகிதம் 5% ஆகும். அப்படி பார்க்கும்போது இந்த வரி அதிகபட்சமாக ரூ 12,500 ஆக கணக்கிடப்படுகிறது.

India China: சீன இறக்குமதி எலெக்ட்ரிக் பேன், ஸ்மார்ட் மீட்டர்களுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு முடிவு

வருமான வரிச் சட்டம் 87A பிரிவின் கீழ் விலக்கு:
இருப்பினும், வருமான வரிச் சட்டப் பிரிவு 87A-ன் கீழ், மொத்த நிகர வரிக்குட்பட்ட வருமானம் விலக்குகளைப் பெற்ற பிறகு ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், மேலும் விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போது, உங்களது வருமானம் TDSக்கு உட்பட்டிருந்தால் அல்லது ரூ. 12,500 வரி கழிக்கப்பட்டிருந்தால், வருமான வரிக் கணக்கை (ITD) தாக்கல் செய்யும் போது, 87A-ன் கீழ் விலக்கு  பெறலாம். வரி விலக்கு பணமாக ரூ.12,500 வரை திரும்ப பெறலாம். நீங்கள் செலுத்தும் நிகர வரி பூஜ்ஜியமாகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios