ஹோண்டா, ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவன கார் மாடல்கள் கிராஷ் டெஸ்டில் அசத்தி இருக்கின்றன.
ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி, ஜாஸ், ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் மற்றும் நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மாடல்கள் குளோபல் GNCAP கிராஷ் டெஸ்டில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கின்றன. நான்கு கார் மாடல்களும் adult occupant protection பிரிவில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கின்றன.
நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி மற்றும் ஜாஸ் மாடல்கள் adult occupant protection பிரிவில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கின்றன. இரு மாடல்களும் இந்த பிரிவில் முறையே 12.03 மற்றும் 13.89 புள்ளிகளை பெற்றுள்ளன. இரு ஹோண்டா கார் மாடல்களும் 49 புள்ளிகளுக்கு முறையே 38.27 மற்றும் 31.54 புள்ளிகளை பெற்றன. சிட்டி மாடல் child occupant protection பிரிவிலும் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்றது.

ஹோண்டா ஜாஸ் மாடல் child occupant protection பிரிவில் மூன்று நட்சத்திர புள்ளிகளை பெற்றது. நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலில் முன்புறம் சீட்பெல்ட் பிரீ-டென்ஷனர், பக்கவாட்டில் ஏர்பேக், டிரைவ் நீ ஏர்பேக் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கவில்லை. ஹோண்டா ஜாஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் இவை வழங்கப்படவில்லை. இத்துடன் ISOFIX வசதியும் வழங்கப்படவில்லை.

ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் மாடல்கள் child occupant protection பிரிவில் இரண்டு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கின்றன. adult occupant protection பிரிவில் ரெனால்ட் கைகர் மாடல் 12.34 புள்ளிகளை பெற்றது. child occupant protection பிரிவில் இந்த மாடல் 21.05 புள்ளிகளை பெற்றது. நிசான் மேக்னைட் மாடல் adult மற்றும் child occupant protection பிரிவுகளில் முறையே 11.85 மற்றும் 24.88 புள்ளிகளை பெற்றது.
குளோபல் NCAP சோதனையின் போது பக்கவாட்டில் ஏர்பேக், டிரைவர் நீ ஏர்பேக், ISOFIX உள்ளிட்டவைகள் இன்றி ரெனால்ட் கைகர் பங்கேற்றது. நிசான் மேக்னைட் மாடலிலும் இந்த பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
