Asianet News TamilAsianet News Tamil

HITS கல்வி நிறுவனத்தின் கொரோனா போரில் உயிர்நீத்த தியாகிகள் வார்டு தத்தெடுப்பு திட்டம்..!

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான, ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்(Hindustan Institute of Technology and Science - HITS), அகில இந்திய அளவில், கொரோனாவுக்கு எதிரான போரில், உயிர்நீத்த தியாகிகளுக்கான தத்தெடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
hindustan institute of technology and science adopt covid martyrs ward scheme
Author
Chennai, First Published Jul 20, 2020, 10:14 PM IST

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான, ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்(Hindustan Institute of Technology and Science - HITS), அகில இந்திய அளவில், கொரோனாவுக்கு எதிரான போரில், உயிர்நீத்த தியாகிகளுக்கான தத்தெடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கொரோனா வாரியர்களின் வார்டுகளில், தங்கள் உயிர்நீத்து, கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய கொரோனா வாரியர்கள், இந்த திட்டத்தின் சலுகைகளை அனுபவிக்கும் விதிமுறைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், கல்வி கட்டணம் முழுவதுமாகக்கூட தள்ளுபடி செய்யப்படும்.

தனித்துவமான திட்டம் ஒன்று உள்ளது. அதன்படி, மாணவர்களின் படிப்புச்செலவு, தங்கும் செலவு ஆகியவற்றையும் ஏற்றுக்கொண்டு, அதுபோக மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். ஆனால் இந்த உதவித்தொகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

hindustan institute of technology and science adopt covid martyrs ward scheme

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலில், கொரோனாவை கண்டு அஞ்சி நடுங்காமல், துணிச்சலுடன் ஒற்றுமையாக இணைந்து கொரோனாவிடமிருந்து நாட்டை காக்க, தன்னலமற்ற மகத்தான சேவையை செய்துவரும் கொரோனா போர்வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஹிந்துஸ்தான் கல்விக்குழும நிறுவனர் தலைவர் டாக்டர்.கே.சி.ஜி.வெர்கீஸ் பெருந்தன்மையுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இதுதவிர, கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் - ஊழியர்கள் ஆகியோருக்கான உதவித்தொகை திட்டத்தையும் HITS அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்துவிதமான கல்விப்பிரிவுகளுக்கும் சேர்த்து 2 ஆண்டு காலத்தில் மொத்தம் 100 உதவித்தொகைகள் வழங்கப்படும். டாக்டர்.கே.சி.ஜி.வெர்கீஸ் உதவித்தொகை திட்டத்தின் கீழும் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் உதவித்தொகை, 3 விதமான பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

hindustan institute of technology and science adopt covid martyrs ward scheme 

1) மெரிட் உதவித்தொகை - 12ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் HITS நுழைவுத்தேர்வு(HITSEEE) மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.  

2) Merit Cum Means உதவித்தொகை - பொருளாதார ரீதியாக பின் தங்கிய/மாற்றுத்திறனாளி/முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய மாணவர்களுக்கு வழங்கப்படும்.  

3) விளையாட்டு மற்றும் கலாச்சார உதவித்தொகை - மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் சாதித்த அல்லது சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios