ஹோட்டலுக்குப் போய் தாராளமா செலவு பண்ணுற ஆளா? நீங்க தான் ஐ.டி. துறையின் டார்கெட்!!
ஹோட்டல்கள், விருந்து அரங்குகள், சொகுசு பிராண்ட்களின் சில்லறை விற்பனையாளர்கள், ஐவிஎஃப் கிளினிக்குகள், மருத்துவமனைகள், டிசைனர் துணிக்கடைகள், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் போன்றவற்றில் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், சொகுசு பிராண்ட் கடைகள், மருத்துவமனைகள் மற்றும் ஐ.வி.எஃப். கிளினிக்குகள் போன்ற வணிகத் துறைகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமானவரித் துறையிடம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நேரடி வரி நிர்வாகத்திற்கான உயர்மட்ட அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரி நிலுவைத் தொகையைவசூலிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நேரடி வரிகள் வாரியத்தின் வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில் வாரியம் வரி வசூல் தொடர்பான அடுத்தகட்ட முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் நேரடி வரிகள் வாரியம், மத்திய செயல் திட்டம் 2024-25 எனப்படும் வருடாந்திர செயல் திட்டத்தை வெளியிட்டது.
பள்ளி மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை ஸ்காலர்ஷிப்! விண்ணப்பிப்பது எப்படி?
2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் போது நிதி நிறுவனங்ககள் அவை பற்றிய விவரத்தை நிதிப் பரிவர்த்தனை அறிக்கை (SFT) மூலம் நேரடி வரிகள் வாரியத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இது தொட்ரபாக ஆய்வு செய்தபோது, பரவலாக இந்த விதி மீறப்படுவது தெரியவந்துள்ளது என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், 139A பிரிவின்படி, இத்தகைய பரிவர்த்தனைகளின் பான் எண்ணை வழங்கப்பட வேண்டும். இதை உறுதிசெய்ய சரிபார்ப்பு வழிமுறையும் இப்போது இல்லை. எனவே, அதிக மதிப்பு கொண்ட பணப் பரிவர்த்தனைகளை வருமான வரி தகவலுடன் சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று வருமான வரித்துறைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், விருந்து அரங்குகள், சொகுசு பிராண்ட்களின் சில்லறை விற்பனையாளர்கள், ஐவிஎஃப் கிளினிக்குகள், மருத்துவமனைகள், டிசைனர் துணிக்கடைகள், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் போன்றவற்றில் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில், வரி ஏய்ப்பைத் தடுக்க நாடு முழுவதும் 1,100 ரெய்டுகளை வருமான வரித் துறை மேற்கொண்டது. இதன் மூலம் 2,500 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.1,700 கோடி ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
டேட்டா மைனிங் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் காண்பதற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன என்றும், அத்தகைய தரவை திறம்பட பயன்படுத்தினால், அதிக எண்ணிக்கையிலான வரி செலுத்துவோரை அடையாளம் காணலாம் என்றும் நேரடி வரிகள் வாரியம் வலியுறுத்தி இருக்கிறது.
2023-24 நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தவர்களைவிட, நடப்பு நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என வரித் துறைக்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? இந்தத் திட்டத்தில் இணைவது எப்படி?