hermit : Pegasus spyware ஆன்ட்ராய்டுகளை கண்காணித்து உளவுபார்க்கும் ஹெர்மிட்(hermit) எனும் செயலியை சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெகாசஸ் பயன்பாடு பெரிய சிக்கலை ஏற்படுத்திய நிலையில் ஹெர்மிட் வந்துள்ளது.
ஆன்ட்ராய்டுகளை கண்காணித்து உளவுபார்க்கும் ஹெர்மிட்(hermit) எனும் செயலியை சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெகாசஸ் பயன்பாடு பெரிய சிக்கலை ஏற்படுத்திய நிலையில் ஹெர்மிட் வந்துள்ளது.
ஹெர்மிட் எனும் செயலிகளை அரசாங்கங்கள் தங்களின் உயர் அதிகாரிகள் அனுப்பும் எஸ்எம்எஸ்களை உளவு பார்க்கவும், பெரிய தொழிலதிபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரை உளவுபார்க்கவும் பயன்படுத்துப்படும் செயலியாகும்.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான லுக்அவுட் த்ரட் லேப் இந்த உளவு செயலியைக் கண்டறி்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கஜகஸ்தான் அரசு இந்த செயலையை பயன்படுத்தியபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. கஜகஸ்தானில் நாடுமுழுவதும் பெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடித்தது. அதைக் கட்டுப்படுத்த அரசு இந்த செயலியைப் பயன்படுத்தியது.
சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் பிளாக்கில் பதிவிட்ட கருத்தில் “எங்களின் ஆய்வின் முடிவில், ஹெர்மிட் எனும் உளவு செயலியை இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆர்சிஎஸ் லேப் மற்றும் டைக்லேப் எஸ்ஆர்எல் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
ஹெர்மிட் செயலி புழக்கத்துக்கு வந்துள்ளது முதல்முறை அல்ல, 2019ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக நடவடிக்கையின்போது, இத்தாலி அதிகாரிகள் ஹெர்மிட் செயலியை பயன்படுத்தினார்கள்.

சிரியாவின் வடகிழக்கில் உள்ள குர்திஷ் மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த ஹெர்மிட் செயலி பயன்பாடுஇருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்
ஹெர்மிட்டை உருவாக்கிய ஆர்சிஎஸ் லேப், 30 ஆண்டுகளாக செயல்படக்கூடிய நிறுவனமாகும். பெகாசஸை உருவாக்கிய எஸ்எஸ்ஓ குரூப் டெக்னாலஜி, காமா குரூப் ஆகியவற்றின் சந்தையில் ஹெர்மிட்டும் இருக்கிறது
ஆர்சிஎஸ் லேப் நிறுவனம் தன்னுடைய ஹெர்மிட் செயலியை பாகிஸ்தான், சிலி, மங்கோலியா, வங்கதேசம், வியட்நாம், மியான்மர், துர்க்மெனிஷ்தான் ஆகிய நாடுகளின் உளவுத்துறை, புலனாய்வுத்துறைக்கு வழங்கியுள்ளது.

ஆர்சிஎஸ் லேப் நிறுவனம் சட்டப்பூர்வமாக உளவுபார்க்க மட்டுமே ஹெர்மிட் செயலியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக அரசாங்கத்தின் உளவுத்துறை, புலனாய்வுத்துறைக்கு வழங்குகிறது.
ஆனால், தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் வாங்கும் பல நாடுகளின் அரசுகள், பெரிய தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், மனிதஉரிமைஆர்வலர்கள், கல்வியாளர்கள், அரசுஉயர் அதிகாரிகளை வேவுபார்க்கவும், உளவுபார்க்கவுமே பயன்படுத்துகிறது என்று சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
