ஹெச்டிஎஃப்சி - ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பு மூலமாக உலகின் 4வது பெரிய வங்கியாக மாறுகிறது ஹெச்டிஎஃப்சி.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சியும், நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சியும் இணையவுள்ளன. இந்த இணைப்பு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இணைக்கப்பட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி நிறுவனம் உலகின் பங்குச் சந்தை மூலதனத்தில் நான்காவது இடத்தைப் பெறும். $172 பில்லியன் மதிப்புள்ள இந்த இணைக்கப்பட்ட நிறுவனம், JPMorgan Chase, Industrial and Commercial Bank of China மற்றும் Bank of America ஆகியவற்றுக்குப் பிறகு உலகின் நான்காவது பெரிய வங்கியாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

ஹெச்டிஎஃப்சி - ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும். ஹெச்டிஎஃப்சி (HDFC) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாரியங்கள் ஜூன் 30 அன்று கூடி, இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கும். எச்டிஎஃப்சி வங்கியுடன் கார்ப்பரேஷனின் இணைப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று பரேக் கூறினார். இந்தியாவின் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப் பெரிய பரிவர்த்தனையாகக் கருதப்படும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய உள்நாட்டு அடமானக் கடன் வழங்குபவரைக் கையகப்படுத்த ஒப்புக்கொண்டது. முன்மொழியப்பட்ட நிறுவனம் சுமார் ரூ.18 லட்சம் கோடி மொத்த சொத்துக்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஹெச்டிஎஃப்சி நிறுவனம் சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும். இது ஜெர்மனியின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.
இது அதன் கிளை வலையமைப்பை 8,300 ஆக உயர்த்தி, மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,77,000 ஆக உள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும், HDFC வங்கி 100 சதவிகிதம் பொதுப் பங்குதாரர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். மேலும் HDFC இன் தற்போதைய பங்குதாரர்கள் வங்கியின் 41 சதவிகிதத்தை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு எச்டிஎஃப்சி பங்குதாரரும் அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 25 பங்குகளுக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் 42 பங்குகளைப் பெறுவார்கள்.
"உலகளவில் மிகக் குறைவான வங்கிகள் உள்ளன. இந்த அளவு இன்னும் நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று Macquarie Group Ltd. இன் டேட்டா பிரிவின் இந்தியாவின் நிதிச் சேவைகள் ஆராய்ச்சியின் தலைவர் சுரேஷ் கணபதி ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார்.
வங்கி 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நான்கு ஆண்டுகளில் தங்கள் கிளைகளை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம் என்று ஹெச்டிஎஃப்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு
