ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிய லைவ்-வயர் S2 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் லைவ்-வயர் டெல் மர் என அழைக்கப்பட இருக்கிறது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் லைவ்-வயர் ஒன் மாடலின் கீழ் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய டெல் மர் மாடல் லைவ்-வயர் புதிய ARROW பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பேக், எலெக்டிரானிக்ஸ் மற்றும் மோட்டார் உள்ளிட்டவை எடையை மற்றும் விலையை குறைப்பதோடு அதிக ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பிளாட்ஃபார்மின் S2 வெர்ஷன் மிடில்-வெயிட் தர செயல்திறன் வெளிப்படுத்துகிறது. எதிர்காலத்தில் குறைந்த விலை மாடல்களும் ARROW பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட இருக்கின்றன.

இதுவரை டெல் மர் மாடலின் வடிவமைப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் ஃபிளாட் டிராக்கர் தீம் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த மாடலின் பல்வேறு அம்சங்களை மேம்பட்ட firmware over the air (FOTA) முறையில் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் ஹை-டெக் இ.வி. மாடல்களுக்கு கிடைக்கும் அமோக வரவேற்பை பொருத்து இதன் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.