Asianet News TamilAsianet News Tamil

gst tax slab: ஜிஎஸ்டி வரி படிநிலையில் மாற்றம் வருகிறதா? 15% விரிவிதிப்பு அறிமுகம்?

gst tax slab: ஜிஎஸ்டி வரி படிநிலையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

gst tax slab: Change in GST structure? suggest single 15% levy
Author
New Delhi, First Published Mar 22, 2022, 11:36 AM IST

ஜிஎஸ்டி வரி படிநிலையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரி விதிப்பில் மாற்றம்

இதன்படி, 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரிகள் நீக்கப்பட்டு 15 சதவீதமாகவும், 5 சதவீதவரி 8 சதவீதமாகவும் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.இதுதொடர்பாக  அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு அடுத்த மாதத்தில் விவாதிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

gst tax slab: Change in GST structure? suggest single 15% levy

4 படிநிலை வரி

தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 4 படிநிலைகள் உள்ளன. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீத வரிகள் விதிக்கப்படுகின்றன. இதில் தற்போது குறைந்தபட்ச வரியாக இருக்கும் 5 சதவீதத்தை 8% உயர்த்தவும், 18 சதவீத வரியையும், 12 சதவீத வரியையும் நீக்கிவிட்டு 15 சதவீதமாகவும் கொண்டுவர ஆலோசனைகள் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளன

இந்த ஆலோசனைகள் குறித்து அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு அடுத்த மாதம் கூடி , மாநிலங்கள் வரிவருவாய் நிலவரம் உள்ளிட்டவற்றைக் கேட்டு ஆய்வு செய்யும் எனத் தெரிகிறது. 

gst tax slab: Change in GST structure? suggest single 15% levy

குழப்பம்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் தற்போது இருக்கும் 4 வரி படிநிலைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டுஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஜிஎஸ்டி வரிவருவாய்க்கு மாறியதால், மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் எந்தவிதமான வரிவருவாய் இழப்பும் இல்லை. இந்த வருவாய்-சமநிலை வீதம் 15.5 சதவீதமாக இருக்கிறது. வரிவிலக்குகள், வரிக்குறைப்பு ஆகியவற்றால் வரிவீதம் 11.6% மாகக் குறைந்துள்ளது.

ஆலோசனைகள்

ஜிஎஸ்டி வரியில் தற்போதிருக்கும் 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிக்கும்பட்சத்தில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம்கோடி கிடைக்கும். தற்போது பணவீக்கம் கடுமையாக இருக்கும் நிலையில் இந்த நேரத்தில் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதும் சரியான முடிவாக இருக்காது என்று அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவில்உள்ள உறுப்பினர்களும் கருதுகிறார்கள்.

gst tax slab: Change in GST structure? suggest single 15% levy

அதேநேரம், “ 12 சதவீதம் வரி, 18 சதவீத வரி ஆகியவற்றை நீக்கிவிட்டு 15 சதவீத வரி அறிமுகப்படுத்துவதை அமைச்சர்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களில் சிலர் வரவேற்றுள்ளனர். புகையிலைஉள்ளிட்ட உடலுக்கு கேடுவிளைவிக்கும் விளைவிக்கும் பொருட்களுக்கான செஸ் வரியை உயர்த்த வேண்டும் எனவும் உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்”  எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

Follow Us:
Download App:
  • android
  • ios