july gst collection: ஜூலை ஜிஎஸ்டி வரி வசூல் 28% அதிகரிப்பு: தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடி
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் 2022, ஜூலை மாதத்தில்28 சதவீதம் அதிகரித்து ரூ.1.49 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் 2022, ஜூலை மாதத்தில்28 சதவீதம் அதிகரித்து ரூ.1.49 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த மே, ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வரியைவிட, 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜூலை 31, கடைசிநாளில் 63.47 லட்சம் பேர் ஐடி ரிட்டன் தாக்கல்
அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 5-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல், நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலைவிட குறைவாகவே இருக்கிறது. ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ஏப்ரலைவிட குறைவு என்றாலும், 2-வது அதிகபட்ச வசூலாகஇருக்கிறது. தொடர்ந்து 13 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு
2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 49ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.25 ஆயிரத்து 751 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.32 ஆயிரத்து 807 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.79 ஆயிரத்து 518 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.10 ஆயிரத்து 920 கோடி கிடைத்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.32,3654 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து ரூ.26,774கோடி மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மத்திய அரசுக்கு ரூ.58,116 கோடியும், மாநிலங்களுக்கு ரூ.59,581 கோடியும் வசூலாகியுள்ளது.
இதுவரை இந்த ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் மாத சராசரி ரூ.1.51 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட, 22 சதவீதம் அதிகமாகும்.
itr filing date: ஐடி ரிட்டன் தாக்கலுக்கு 31ம்தேதி கடைசி: தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
பொருளாதாரம் படிப்படியாக கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதுதான் ஜிஎஸ்டி வரி உயர்வில் தெரிகிறது. 2022, ஜூன் மாதத்தில் 7.45 கோடி இவே பில் உருவாக்கப்பட்டது.இது கடந்த மே மாதத்தைவிட சற்று அதிகமாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.