ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் 12 சதவீதம் உயர்வு! ரூ.1.61 லட்சம் வசூல்!
கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி வரி ரூ.1.61 கோடி கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் நான்காவது முறையாக 1.60 கோடிக்கு அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியுள்ளது.
இந்த ஆண்டு நான்காவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஜூன் 2023 இல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,61,497 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 12% அதிகமாகும் என்று சனிக்கிழமை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த ஜிஎஸ்டியில், மத்திய ஜிஎஸ்டி ரூ.31,013 கோடியும் மாநில ஜிஎஸ்டி ரூ.38,292 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,292 கோடியும் (இறக்குமதி பொருட்களின் மீதான வரி ரூ.39,035 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர செஸ் வரி ரூ.11,900 கோடி (இறக்குமதி பொருட்களின் மீதான வரி ரூ.1,028 கோடி உட்பட) கிடைத்துள்ளது.
மனிதாபிமானம் செத்துருச்சு! தூங்கும் பயணிகளை தண்ணீரைக் கொட்டி எழுப்பும் ரயில்வே போலீஸ்!
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.36,224 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.30,269 கோடியும் அரசு விடுவித்துள்ளது. ஜூன் 2023 இல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த வருவாய் மத்திய ஜிஎஸ்டிக்கு ₹67,237 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டிக்கு ₹68,561 கோடியாகவும் உள்ளது என்று நிதி அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தின்போது, உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெற்ற வருவாயை விட 18 சதவீதம் அதிகம். 2021-22, 2022-23 மற்றும் 2023-24 நிதி ஆண்டுகளில் முதல் காலாண்டுக்கான சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் முறையே ரூ.1.10 லட்சம் கோடி, ரூ.1.51 லட்சம் கோடி மற்றும் ரூ.1.69 லட்சம் கோடி.