விமானங்களுக்குப் பயன்படும் ஏவியேஷந் டர்பைன் ஃபியுள் எனப்படும் ஏடிஎப் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிப்போம் என்று நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
விமானங்களுக்குப் பயன்படும் ஏவியேஷந் டர்பைன் ஃபியுள் எனப்படும் ஏடிஎப் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிப்போம் என்று நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
விமான எரிபொருள் கடுமையாக விலை உயர்ந்துள்ளது, விமானநிறுவனங்களை பெரும்கவலையில் ஆழ்த்தியுள்ளநிலையில் இந்தத் தகவலை நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இப்போது அதிகபட்சமாக ஜிஎஸ்டி 28 சதவீதம் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டிவரம்புக்குள் கொண்டுவந்தால், விமான எரிபொருளுக்கு 28 % விதிக்கலாம்.

ஆனால், சாமானிய மக்கள் முதல், நடுத்தர மக்கள்வரை பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டநிலையில் அது குறித்து செவிசாய்க்காத மத்திய அரசு விமானஎரிபொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஜிஎஸ்டிவரி கடந்த 2017ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, டீசல், பெட்ரோல், ஏடிஎப் ஆகியவை மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவில்லை. மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வருவாய் வீதத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், பெட்ரோல், டீசல் விலையில் பெரும்பகுதி மத்திய அரசு வரிக்கும், மாநில அரசு வரிக்கும் செல்வதால் அதன்விலை ஏற்றத்தை சமானிய மக்களும், நடுத்தர குடும்பத்தினரும்தான் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதற்காகத்தான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால், அதிகபட்சமாக 28 % வரியுடன் முடிந்துவிடும்.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 90 டாலராக உயர்ந்துவிட்டது. டாலருக்கு எதிரான இந்தியரூபாயின் மதிப்பு 75 ரூபாயாகச் சரிந்துவிட்டது. இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு அதிகவிலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் இந்திய நிறுவனங்களுக்கும், அதனுடைய விலை ஏற்றத்தை நிறுவனங்களும், மக்களும் சுமக்கிறார்கள்.
இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் சார்பில் நேற்று டெல்லியில் நேற்று பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
சர்வதேச அளவில் விமானங்களுக்குப் பயன்படும் ஏடிஎப் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, விமானநிறுவனங்களுக்கு பெரும் கவையை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் விமான எரிபொருளை கொண்டுவருவது குறித்துஅடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். கச்சா எண்ணெய் விலை உயர்வு விமானநிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே கவலையளிக்கும்விதத்தில்தான் இருக்கிறது.

கொரோனாவுக்குப்பின் விமானநிறுவனங்கள் மீண்டுவரும் நிலையில் இந்த விலை உயர்வு சவாலாக இருக்கிறது. விமானநிறுவனங்களுக்கு எந்த அளவுக்கு சிறப்பான உதவிகளை செய்ய முடியும் என்பது குறித்து வங்கிகளிடம் விரைவில் பேசுவேன்.
தொழில்துறை முன்னேற்றத்துக்கும் வங்கிகளால் எந்த அளவுக்கு எளிதாகக் கடன் அளிக்க முடியும் என்பது குறித்தும் பேசுவேன். ஆதலால், மத்திய அரசிடம் இருந்து விமானநிறுவனங்களுக்கும், தொழில்துறைக்கும் நிச்சயம் ஆதரவு இருக்கும்
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
