GST Council Meeting : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது: என்னென்ன அம்சங்கள் விவாதிக்கப்படும்?
49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை நடக்கிறது.
49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை நடக்கிறது.
கடந்த முறை டெல்லியில் காணொலியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்படாமல் முடிக்கப்பட்டது இந்த முறை அமைச்சர்கள் குழு பான் மசாலா மற்றும் மணல் குவாரி உள்ளிட்டவற்றுக்கு வரிவிதிப்பு குறித்த அறிக்கையை வழங்கும்.
வரியே இல்லாமல் பொருளாதாரத்தை ஒர் அரசால் இயக்க முடியுமா? ஏதாவது நாடுகள் இருக்கிறதா?
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதிஅமைச்சர்கள், யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
ஆன்-லைன் கேமிங், கேசினோஸ் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தமுறையும் அது விவாதத்துக்கு எடுக்கப்படாது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன
எந்தெந்த அம்சங்கள் விவாதிக்கப்படும்
1. பான் மசாலா, மெல்லும் புகையிலை உள்ளிட்ட பொருட்கள் வரி ஏயப்பில் ஈடுபடுகின்றன. அதைத் தடுக்கும் பொருட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு அலோசித்ததது. அந்த அறிக்கையை அமைச்சர்கள் குழுவின் தலைவர் ஒடிசா நிதிஅமைச்சர் நிரஞ்சன் பூஜாரி தாக்கல் செய்துள்ளார்.
2. அந்த அறிக்கையை நாளைகூட்டத்தில் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, பான் மசாலா, குட்கா நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்வதை தடுக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைகிறது? என்ன காரணம்? மத்திய அரசு பரிசீலனை
3. இது தவிர புதிய எந்திரங்களைப் பதிவு செய்தல் குறித்து விவாதிக்க உள்ளது. எந்திரங்களில் இருந்து கிடைக்கும் ரிட்டன், இன்புட், கிளையரன்ஸ், இ-இன்வாய்ஸ் கட்டாயம், இ-வே பில் கட்டாயம், பாஸ்ட்டேக் பொருத்துதல், சிசிடிவி கேமிரா பொருத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம்.
4. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் சர்வதேச ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படலாம். அதாவது இந்தியப் பொருட்களை ஏற்றி வெளிநாடு செல்லும் இந்தியக் கப்பல்கள், வெளிநாட்டுக் கப்பல்களுக்கு வரிவிதிப்பை குறைக்கலாமா அல்லது நீக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
5. தற்போதுள்ள நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் அனுப்பும் பொருட்களை கொண்டு செல்லவரும் கப்பல்களுக்கு ஐஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.