தொடர்ந்து 8-வது மாதமாக பிப்ரவரியிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதிலும் தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது என்று  மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 8-வது மாதமாக பிப்ரவரியிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதிலும் தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 26 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.24 ஆயிரத்து 435 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.30 ஆயிரத்து 779 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.67 ஆயிரத்து 471 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.10 ஆயிரத்து 340 கோடி கிடைத்துள்ளது. 

தொடர்ந்து 8வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதிலும் தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வருவாயைவிட 18 சதவீதம் கூடுதலாக இந்த ஆண்டு பிப்ரவரியில் வரி வசூலாகியுள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரியை விட 26 சதவீதம் அதிகமாகும். 

 நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர்-டிசம்பரில் சராசரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாகும். ஆனால் முதல் காலாண்டில் மாத சராசரி ரூ.1.10லட்சம் கோடியாகவும், 2-வது காலாண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாகவும் இருந்தது. 

கடந்த 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த 5 மாதங்களில் அக்டோபர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரிதான் 2-வது அதிகபட்சமாகும். ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி எட்டியது. ஜூலையில் ரூ.1.16லட்சம் கோடியும், ஆகஸ்டில் ரூ.1.12 லட்சம் கோடியும், செப்டம்பரில் ரூ.1.17 லட்சம் கோடியும், அக்டோபரில் ரூ.1.30 லட்சமும், நவம்பரில் ரூ.1.31 லட்சம் கோடியும், டிசம்பரில் ரூ.1.29 லட்சம் கோடியும வசூலாகியது.

பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் என்கிற போதிலும்கூட, ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் பாதியளவு லாக்டவுன், வார இறுதிநாட்கலில் கட்டுப்பாடு, கொரோனா தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள்இருந்த நிலையிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ஒருலட்சம் கோடியைக் கடந்துள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வரும் 2022-23ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக ரூ.9.40லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. அது குறித்த கட்டுரையை படிக்க அடேங்கப்பா! இத்தனை லட்சம் கோடிகளா வீணாகிறது; 9 ஆண்டுகளில் மத்திய அரசின் வட்டிச் செலவு 3 மடங்காக அதிகரிப்பு