gst collection :நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் 2022, மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் 2022, மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தநிலையில் அதைவிட 16% குறைவாகும். ஆனால், 2021ம் ஆண்டு மே மாதத்தில் இருந்ததைவிட 44 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் மாதத்தில் முதல்முறையாக ஜிஎஸ்டி வசூல்ரூ.1.50 லட்சம் கோடியைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல், நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலைவிட குறைவாகவே இருக்கிறது.ஆனால் மே மாதத்திலும் வசூல் ரூ.1.40 லட்சம் கோடிக்கு அதிகமாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது. மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 3-வது மாதமாக மே மாதத்திலும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. தொடர்ந்து 11 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
மாதம் | தொகை (கோடி) | மாற்றம்(2021-22) |
2022 மே | ரூ.1,40,885 | 44% வளர்ச்சி |
2022 ஏப்ரல் | ரூ.1,67,540 | 30% |
2022 மார்ச் | ரூ.1,42,095 | 15% |
2022 பிப்ரவரி | ரூ.1,33,026 | 18% |
2022 ஜனவரி | ரூ.1,40,986 | 18% |
2021 டிசம்பர் | ரூ.1,29,780 | 13% |
2022 நவம்பர் | ரூ.1,31,526 | 25% |
2021 அக்டோபர் | ரூ.1,30,127 | 24% |
2021 செப்டம்பர் | ரூ.1,14,010 | 23% |
2021 ஆகஸ்ட் | ரூ.1,12,020 | 30% |
2021 ஜூலை | ரூ.1,16,393 | 33% |
2021 ஜூன் | ரூ.92,800 | 2% |
2022ம் ஆண்டு மே மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 41ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.25 ஆயிரத்து 36 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.32 ஆயிரத்து ஒரு கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.73 ஆயிரத்து 345 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.10 ஆயிரத்து 502 கோடி கிடைத்துள்ளது.

மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.27924 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து ரூ.23,123கோடி மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
