Asianet News TamilAsianet News Tamil

Transport Ministry:டூவீலர், கார் வெச்சுருக்கிங்களா! போக்குவரத்து துறையின் புதிய விதிகளை தெரிஞ்சுக்குங்க

Transport Ministry: வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ், பதிவுச்சான்று ஆகியவற்றை எந்த முறையில் தெரியப்படுத்த வேண்டும் என்பதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

Government issues draft rules on display of fitness certificates, registration marks on vehicles
Author
New Delhi, First Published Mar 4, 2022, 12:38 PM IST

வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ், பதிவுச்சான்று ஆகியவற்றை எந்த முறையில் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும் என்பது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட வரைவு விதியில் கூறப்பட்டிருப்பதாவது: 

Government issues draft rules on display of fitness certificates, registration marks on vehicles

நான்கு சக்கர வாகனங்களான இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தங்களிந் தகுதிச் சான்றிதழ், மற்றும் பதிவுச்சான்றை கண்டிப்பாக வெளிப்புறம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். 

  • இதன்படி இந்த வாகனங்களின் தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்ட விவரத்தை   தேதி, மாதம், ஆண்டு என்றவரிசையில் தெரியப்படுத்த வேண்டும்.
  • கனரக, நடுத்தர மற்றும் சரக்கு வாகனங்கள், இலகுரக மோட்டார்கள் தங்களின் தகுதிச்சான்று, பதிவுச்சான்றை முன்கண்ணாடியின் இடதுபுறத்துக்கு மேல்பகுதியில் ஒட்ட வேண்டும்.
  • ஆட்டோ, இ-ரிக்ஸா, இ-கார்ட், குவாட்ரிசைக்கிள் ஆகியவற்றின் தகுதிச்சான்று, பதிவுச்சான்று ஆகியவற்றை முன்பக்க கண்ணாடியின் இடதுபுறத்துக்கு மேல் பகுதியில் ஒட்ட வேண்டும்.

Government issues draft rules on display of fitness certificates, registration marks on vehicles

  • மோட்டார் சைச்கிள், இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை அதன் எப்ஃசி சான்று மற்றும், பதிவுச்சான்றை வாகனத்தின் ஏதாவது ஒருபுறம் தெரியுமாறு ஒட்ட வேண்டும். 

இந்தத் தகவல்களை வாகனங்களில் தெரிவிக்கும் போது, நீலநிற பின்புறத்தில், மஞ்சள் நிற எழுத்துக்களில், ஏரியல்போல்ட் எழுத்தில் இருக்க வேண்டும் 

இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios