Asianet News TamilAsianet News Tamil

நாட்டிலேயே முதல்முறை..! ஏடிஎம்மில் பணம் மட்டுமில்லை, இனி தங்கமும் வாங்கலாம், விற்கலாம்!

goldsikka :பணம் எடுக்கும் டெபாசிட் செய்யும் ஏடிஎம்களை மட்டுமே அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஏடிஎம்களில் தங்கத்தை விற்கவும், வாங்கவும் முடியும். 

goldsikka :Hyderabad to get Indias 1st gold ATM
Author
Hyderabad, First Published Mar 23, 2022, 11:03 AM IST

பணம் எடுக்கும் டெபாசிட் செய்யும் ஏடிஎம்களை மட்டுமே அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஏடிஎம்களில் தங்கத்தை விற்கவும், வாங்கவும் முடியும். 

எங்கு தெரியுமா? தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இந்த புதிய ஏடிஎம் எந்திரத்தை கோல்ட்சிக்கா(Goldsikka Ltd) எனும் டிஜிட்டல் பிளாட்ஃபார் அறிமுகம் செய்துள்ளது.

goldsikka :Hyderabad to get Indias 1st gold ATM

ஏடிஎம்களில் தங்கம்

இந்த ஏடிஎம் சென்று, ஒருவர் தன்னுடைய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் தங்கத்தை வாங்க முடியும். 
இது தவிர ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் ஸ்மார்ட் கார்டுகளையும் இந்த கோல்ட்சிக்கா வழங்குகிறது. இந்த கார்டு மூலமும் தங்கத்தை எளிதாக வாங்கலாம். ஏடிஎம்களில்  பணத்தை எளிதாக எடுப்பதுபோன்று தங்கத்தையும் வாங்கலாம்.

நாட்டிலேயே முதல்முறை

நாட்டிலேயே முதல்முறையாக தங்கம் வழங்கும்ஏடிஎம் எந்திரத்தை கோல்டுசிக்கா நிறுவனம்தான் தொடங்கியுள்ளது. இந்த ஏடிஎம் குறித்து கோல்டுசிக்கா நிறுவனத்தின் சிஇஓ தருஜ் கூறுகையில் “எந்தவிதமான மனதர்கள் உதவியுமின்றி, நம்பகத்தன்மையில்லாத,முன்பின்தெரியாத மனிதர்கள் உதவியின்றி தங்க நகைகள், காசுகள், வாங்கவும்,விற்கவும் நாங்கள் உதவுகிறோம். இதற்காக நாங்கள் சிறப்பு வாய்ந்த ஏடிஎம் எந்திரங்களை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் நிறுவனத்தின சார்பில் வைக்கப்படும் ஏடிஎம்களில் 60 சதவீதம் இனிமேல் கிராமப்புறங்களில் நிறுவப்படும்.

goldsikka :Hyderabad to get Indias 1st gold ATM

எளிதாக வாங்கலாம்

சந்தையில் தங்கத்துக்கு மிகுந்த போட்டி இருக்கிறது, அதை மிகவும் நேர்மையான விலையில் மற்ற போட்டியாளர்களுக்கு போட்டியாக வழங்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இருக்கும் தங்கம் விலைக்கு ஏற்ப ஏடிஎம்களில் விலையும் மாறும். சாதாரண மனிதர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பதைப் போல்,இனிமேல் இந்த ஏடிஎம்களில் தங்கத்தை வாங்க முடியும். முதலில் ஹைதராபாத்தில் ஏடிஎம் எந்திரத்தை அறிமுகம் செய்துள்ளோம். அடுத்ததாக குல்சார் ஹவுஸ், செகந்திராபாத், அப்டிஸ் பகுதியில் அடுத்த 40 நாட்களில் நிறுவப்படும்.

3ஆயிரம் ஏடிஎம்

அடுத்த ஓர் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் 3ஆயிரம் தங்கம் ஏடிஎம் எந்திரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். மாதத்துக்கு 200 முதல் 300 ஏடிஎம்களை அமைக்க இருக்கிறோம். ஒவ்வொரு ஏடிஎம் எந்திரத்திலும் 5 கிலோ தங்கம் வைக்கப்படும். 0.5 கிராம் முதல் 100கிராம் தங்க நாணய்களை பிஸ், ஹால்மார்க் சான்றிதழோடு, தரமாக ஏடிஎம்களில் கிடைக்கும். 

goldsikka :Hyderabad to get Indias 1st gold ATM

மற்ற பொருட்களை சந்தையில் வாங்குவதைப் போன்று கிடைக்கும் அனுபவம் போல் தங்கத்தையும் வாங்கலாம். ஒவ்வொரு கிராம் தங்கமும், வாங்குவோருக்கு கிடைக்கும் முன் திரையில் காண்பிக்கப்படும். அதற்குஏற்றார்போல் எந்திரத்திலும் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios