ஒரே   நாளில்  சவரன்  152  ரூபாய்  அதிகரிப்பு

கடந்த  இரண்டு வாரங்களாகவே  தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து   ஏற்றம்  கண்டு வருகிறது. அதன்படி, இன்று ஒரே  நாளில்   சவரனுக்கு 152  ரூபாய்  அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

 22   கேரட் தங்கம் , கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய்  அதிகரித்து, 2 ஆயிரத்து 804 ரூபாயாகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து  432  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 29 ஆயிரத்து 350  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  44 ரூபாய்  30  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து  370  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது