வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலையில், எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் விலை 26 ஆயிரத்தை கடந்து விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவ்வப்போது தங்கம் மீதான விலை ஏற்றத்தால்,சவரன் விலை ரூபாய் 27 ஆயிரம் தொட உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையில் தங்கம் இறக்குமதிக்கான விழுக்காடு 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு குறைவு என்றுதான் கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் தங்கம் 3,331 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 26 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 44.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.