தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த வாரம் தொடக்கம் முதல் சரிவடைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்றும் சரிவுக்கு வாய்ப்பு இருக்கும் என நடுத்தர மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்துள்ளது.
விலை மாற்றம் ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க ஐரோப்பிய சந்தைகளின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக சரிவைச் சந்தித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 5 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஜூன் மாதம் தொடங்கி 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்தது.
ஒரே நாளில் ரூ.1,200 சரிவு
யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஜூன் 7 ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,980க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் முந்தைய நாளின் விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,955-க்கும், ஒரு சவரன் ரூ.71,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 10 ஆம் தேதியான நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேசமயம், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,350-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை திடீர் உச்சம்
இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து இல்லத்தரசிகள் மற்றும் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.72,160க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 75 உயர்ந்து இன்று ரூ.9,020க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் கோவை, நெல்லை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரையிலும் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 9 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் 1 முதல் தங்கம் விலை நிலவரம்
10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025 - ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
