gold rate today: ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் ஏற்ற, இறக்கத்துடனே காணப்படுகிறது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 160 ரூபாயும் உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் ஏற்ற, இறக்கத்துடனே காணப்படுகிறது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 160 ரூபாயும் உயர்ந்துள்ளது.

கடந்த ஒருவாரமாகவே தங்கத்தின் மதிப்பு கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. சவரணுக்கு 80 ரூபாய் வித்தியாசம்தான் இருக்கிறது. இந்த 80 ரூபாய்க்குள்தான் ஒருவாரமாக விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.
ஜிஎஸ்டி,செய்கூலி, சேதாரம் இல்லை:கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி: தங்க முதலீட்டுக்கு இப்படி திட்டமா
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,7645க்கும், சவரண் ரூ.37,960க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,755 ஆகவும், சவரணுக்கு, ரூ. 80 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து40க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த 7 நாட்களாக கடும் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த 17ம் தேதிமுதல் இதுவரை தங்க நகை சவரண் ரூ.38ஆயிரத்தைக் கடந்து 8 முறை வந்துள்ளது. ரூ.38ஆயிரத்துக்கு கீழ் இரு முறை சென்றுள்ளது. தங்கத்தின் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல், ரூ.38ஆயிரத்து 40 முதல் ரூ.38ஆயிரத்து 200 வரைதான் இருக்கிறது. இந்த விலைக்கு மேல் கடந்த ஒருவாரமாக விலை உயரவும் இல்லை, சரியவும் இல்லை.
கவுதம் அதானி ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை: கல்வி, மருத்துவ உதவிகளுக்கு வாரி வழங்குகிறார்
தங்கத்தில் விலையில் பெரிதாக உயர்வு இல்லாத நிலையில் அதில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணம் என்று தங்க நகை வியாபாரிகளும், சந்தை வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள்.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.65.70க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.65,700க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ரூ.66,000 விலையிலேயே நீடித்திருந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
