Asianet News TamilAsianet News Tamil

gold rate today: ஏற்றத்தில் தங்கம் விலை: 3 நாளில் சவரணுக்கு ரூ.80 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

gold rate today :ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் உயர்ந்துள்ளது.

gold rate today: gold price rises  rises straight 3rd day: check rate in chennai
Author
Chennai, First Published Jun 27, 2022, 10:40 AM IST

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் Ikea india ஸ்டோருக்கு கோடிகளில் இழப்பு : கொரோனா லாக்டவுனால் நஷ்டம் அதிகம்

gold rate today: gold price rises  rises straight 3rd day: check rate in chennai

கடந்த ஒருவாரமாகவே தங்கத்தின் மதிப்பு கடும் ஊசலாட்டத்துடன் இருந்தாலும், கடந்த 3 நாட்களாக தங்கத்தின் மதிப்பு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. 3 நாட்களில் சவரணுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.  

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,755க்கும், சவரண் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,765 ஆகவும், சவரணுக்கு, ரூ. 80 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து120க்கும் விற்பனையாகிறது. 

gold rate today: gold price rises  rises straight 3rd day: check rate in chennai

இலவச ரேஷன் திட்டம் செப்டம்பருக்கு பிறகு இல்லையா? செலவீனத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை

தங்கத்தின் வாரம் முழுவதும் தங்கம்விலை கடும் ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. கடந்த 17ம் தேதிமுதல் இதுவரை தங்க நகை சவரண் ரூ.38ஆயிரத்தைக் கடந்து 8 முறை வந்துள்ளது. ரூ.38ஆயிரத்துக்கு கீழ் இரு முறை சென்றுள்ளது. தங்கத்தின் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல்,  ரூ.38ஆயிரத்து 40 முதல் ரூ.38ஆயிரத்து 200 வரைதான் இருக்கிறது. இந்த விலைக்கு மேல் கடந்த ஒருவாரமாக விலை உயரவும் இல்லை, சரியவும் இல்லை.

அதிலும் இன்றைய காலை நிலவரமான தங்கம் சவரண் ரூ.38,120 என்ற விலை கடந்த 18ம்தேதியிலிருந்து 5-வது முறையாக வந்துள்ளது. தங்கத்தில் விலையில் பெரிதாக வரும் நாட்களில் மாற்றம் இருக்காது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆதலால், தங்கத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணம் என்று தங்க நகை வியாபாரிகளும், சந்தை வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள்.

gold rate today: gold price rises  rises straight 3rd day: check rate in chennai

2022-23ம் ஆண்டுக்கான IT ரிட்டனை நிரப்புவது எப்படி?: வருமானவரி துறை புதிய தகவல்

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.66க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.66,000 என உயர்ந்துள்ளது. கடந்தவாரத்தில் 22ம் தேதி முதல் 24ம் தேதிவரை வெள்ளி கிலோ ரூ.66 ஆயிரமாக இருந்தது. இன்று காலையிலிருந்து மீண்டும் ரூ.66ஆயிரத்தை தொட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios