Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: சரசரவென சரியும் தங்கம் விலை! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்திருக்கிறது. வெள்ளி விலையிலும் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.

Gold Rate Today: Check Gold Silver Price today in Chennai, Coimbatore, Trichy, Madurai
Author
First Published Apr 3, 2023, 12:01 PM IST

ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை சரிவுடன் தொடங்கி இருக்கிறது. சென்ற 2 நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று சற்று குறைந்திருக்கிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,554 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36,432 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இன்று கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 4,534 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆவபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்து 36,272 ரூபாயாக விற்பனையாகிறது.

மார்ச் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.60 லட்சம் கோடியாக அதிகரிப்பு; நிதி வருவாயும் 22 சதவீதம் உயர்வு!!

Gold Rate Today: Check Gold Silver Price today in Chennai, Coimbatore, Trichy, Madurai

வெள்ளி விலையும் சற்று குறைந்திருக்கிறது. நேற்று 77 ரூபாய் 70 காசுகளாக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 60 காசுகள் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் 10 காசுகளாக விற்பனையில் உள்ளது. ஒரு கிலோ வெள்ளி நேற்றைய விலையான 77,700 ரூபாயில் இருந்து 600 ரூபாய் குறைந்து 77,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வைர வியாபாரி போல நாடகமாடி ஒரு கோடி ரூபாய் வைரங்களைக் கொள்ளையடித்த 2 பேர் கைது

Follow Us:
Download App:
  • android
  • ios