சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.73,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,235. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 880-ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,235 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11- ஆம் தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13- ஆம் தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து, கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று விலை குறைந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 120 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் வில்லை சற்று குறைந்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 680 க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,210 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 880 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.9,235 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120 க்கு விற்பனையாகிறது. அதேபோல, 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,600-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.60,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.