Asianet News TamilAsianet News Tamil

சவரன் ரூ.29 ஆயிரம் கடந்தது..! தொடர் விலை உயர்வால் கதறும் மக்கள்..!

கடந்த இரண்டு வார காலமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

gold rate one sovereign crossed 29 thousand
Author
Chennai, First Published Aug 13, 2019, 3:20 PM IST

சவரன் ரூ.29 ஆயிரம் கடந்தது..!  தொடர் விலை உயர்வால் கதறும் மக்கள்..!  

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

கடந்த இரண்டு வார காலமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

gold rate one sovereign crossed 29 thousand

தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 33 ஆயிரம் ரூபாய் ஆகிறது என்ற நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து உள்ளது.அதன்படி பார்த்தால் ஒரு கிராம் 3612 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 15 ரூபாய்  அதிகரித்து, 3627.00 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  தங்கம் விலை ஒவ்வொரு நாளும் இப்படி கூடிக்கொண்டு சென்றால், விரைவில் 30 ஆயிரத்தை தொடும் என்பதில் எந்த வித மாற்று  கருத்தும் கிடையாது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 50 பைசா அதிகரித்து 49.00 ரூபாயாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios