கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

சரசரவென குறைந்தது தங்கம் விலை..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக பங்குச் சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகின்றன. அதில் குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனமும் அதானி குழுமமும் தொடர்ந்து அதிக முதலீடுகளை ஈர்த்து உள்ளது. இதன் எதிரொலியாக தங்கத்தின் மீதான முதலீடு சற்று குறைந்து தற்போது தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது 

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து 24 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போன்று வெள்ளி விலையிலும் 20 காசுகள் குறைந்து 39 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

22 கேரட் ஆபரண தங்கம்..! 

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 3006 ரூபாய்க்கும், சவரன் 24 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில், கிராமுக்கு 20 பைசா குறைந்து , 39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது